நினைவுகள் நனைத்துச் சுமக்கும் பஞ்சானது.


அன்புத் தோழியே!-நீ
மலர்களின் வாசணையா?....
மழை மேக நீர்ச்சரமா?
சூரியக் கதிர்களைப் புதைத்தெழுந்த
அக்கினி புத்திரியா?
பாலைவனப் பசுஞ்சோலையின்
நீர்ச்சுனையா?   -உன்
தோழமையின் வாசணை
நினைவுகளாய்.... பசுமைகளாய்...

உன்னோடு கைகோர்த்துலாவிய
இடங்களெல்லாம் உன்னைத்தானே
தேடித் தேடி துடிக்கின்றன ...
நினைவுத் தடங்கள் நீள மனமோ
நனைத்துச் சுமக்கும் பஞ்சானது....

வல்லை வீதிக்காற்று
நெஞ்சத்தை தீண்டி கதறியது..
நீ என்னோடு பயணித்த நாட்களை
நினைந்து நினைந்து......
நிமிடத்தை உறிஞ்சி உறிஞ்சி
நூறு கதையைக் கிளர்த்தியது..

வாய்வாதம் பிடித்த உன்
கிரந்தம் பூத்த குரலோசையை
காற்று காவி வந்தது போல் பிரமை...
எங்கும் தேடிப் பார்க்கிறேன்
காணவில்லை .
இருளும் ஊர்ந்து செல்லும்
வாகனவிளக்குளும்
வாழ்வின் தத்துவச் சான்றுகளாய்...

மூக்கில் விரல் வைத்து நோக்கிய
அதிச நட்பு நமது....
ஆரோக்கிய நட்பில் தியாகங்கள் அத்திவாரம்.
எங்கள் நட்பிலும் தியாகங்களின்
சுவடுகள் நிறைந்திருக்கு. உன்னை
வெற்றுக் காற்றில் தோடுகிறேன்
விழித்திரையில் கார்மேகத்திடல்  அடைக்கலம் புகுந்து
விடைபெறும் அடைமழையாய்....

கடைசியாய் சந்தணப் பொட்டோடு
சாந்த சொரூபியாய்
விடை பெற்ற கோலத்தில்
உன் கண்களின் குளிர்ச்சியும்
மனதில் மறைத்த ரகசியங்களும்
பிரதிபலிக்கின்றன.....

காலப் பெருவெளியில்
சந்திக்க நீ தந்தவை
மனம் நிறைந்த நினைவுகளே...
நீண்டு கிடக்கும் வல்லை வான் வீதியில்
கூனல் பிறை எழுந்து சுடர் ஏற்றுது...
கண்ணீர் நீர்மலர்கள்
நீ நடந்த வீதியெங்கும்
உதிர்ந்து உருகிக் கரையுது.
அன்பின் தத்துவங்களை
கண்மணிகள் கரைந்து கரைக்கின்றன.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹