அறியாமை
பூமியின் பச்சைத் தங்கம்.
புல் வகையில் பெரிய புல்.
மூங்கில் என்பது அதன் பெயர்.
ஓங்கி நீண்டு வளரும்.
காற்றுக்கும் புயலுக்கும்
வளைந்து தற்காக்கும்.
இருந்தும் வண்டுகளின்
பற்களுக்குப் பதமாகும்.
தங்கள் கோரப்பற்களால்
துளையிட்டுத் துளையிட்டு மகிழும்
வண்டுகள் அறிவதில்லை
மூங்கில் ஒரு நாள்
புதிய கீதத்தைப் பூமிக்குத் தருமென்பதை.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment