முழுநிலவு ரகசியங்கள்...
முழு நிலா இரவில் மனமோ
முந்தி முந்தி சிறகடிக்குது.....
கூட்டாயிருந்து குழைத்தொரு
உருண்டைச் சோற்றை உண்ட
சுகம் அடிநாவில் அமிர்தமாய்......
ஆட்டமும் பாட்டுமாய் முழுநிலவு தழுவ
கடற்கரை நண்டு பிடித்திட
ஓடிய மணல்வெளி விழிகளிலே.....
ஒய்யாரமாய் காட்டுக் கட்டிலில்
காற்று வாங்கி முழுநிலவை
கண்ணுக்குள் பதித்த
இரவுகள் அற்புதம்......
பாட்டிலே தமை மறந்து
முழுநிலா முறுவலாய்
ஆடிய தங்கையரின்
நாட்டியங்கள் சிரிப்புக்கள்
கலைந்து போன கனவுகளாய்....
முழுநிலவில் முகிழ்ந்த
காதல் கனவுகள் பசுமையாய்....
முழுநிலவுக்கு முத்தமிட்டு
இரவுத் தாயை அணைக்கின்றேன்.
விடியலுடன் சந்திப்போம்....
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment