Posts

Showing posts from May, 2018

எதை மறப்பேன் ? எப்படி மறப்பேன்?

Image
கனதியாக கனக்கும் உண்மைகளை கனவாக நினைத்து கடந்து செல் என்கிறார்கள். எப்படி முடியும்? எதை கனவாக கருதுவது? பதுங்குகுழியில் புதைத்தவரையா? எறிகணையில் சிதைந்தவரையா? கிபீர் அடியில் கருகியோரையா? எப்படி மறப்பேன்.? எதை மறப்பேன்? தாயிறந்ததை உணராத குழந்தை உதிரத்தை சுவைத்ததை மறக்கவா? பட்டினியால் குடல் சுருங்கி கௌரவத்தால் செத்தவரை மறக்கவா? உணவுக்காக பகலிரவாய் தெரு நாய்களாய் அலைந்ததை மறக்கவா? உற்றார் உறவினர் முகம் பார்க்க ஏங்கி இறுதி மூச்சை விட்ட பெயர் தெரியா உறவுகளை மறப்பதா? மரங்களிலே சிதறித்தொங்கிய மனித அங்கங்களை மறப்பதா? எதை மறப்பேன்? எப்படி  மறப்பேன்? உணவு தேடிச் சென்றவர் திரும்பாத கதை மறக்கவா? சுடும் வெயிலோடும் மழை நுளம்போடும் கொத்துக் குண்டடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் பக்கத்தில் பார்த்திருக்க அணு அணுவாய் செத்தவரை மறக்கவா? தலை பிறிதாய் பந்தாக பறந்த நிஜம் மறக்கவா? பகலிரவாய் பதைபதைத்து கடந்த துயர் மறக்கவா? புதைக்கா உடலை சுவைத்த நாய்கள் கலைத்த துயரை மறக்கவா? காலடியில் சதசதக்க உழக்கி ஓடிய மனித தசையைக் குருதியை மறக்கவா? எதை மறப்பேன்? எப்படி மறப்ப

நந்திக்கடலோரம் ஒளி ஏந்தி அஞ்சலிப்போம்.

Image
முள்ளிவாய்க்கால் முடிவிடத்தில்  கொள்ளியிட வசதியில்லை அள்ளியணைத்து உறவுகள் கூடி கடைசி அஞ்சலி  செலுத்த வழியில்லை. ஒப்பாரி பாடி உறவுகளுக்கு இறுதிபாட வழியில்லை. செத்தவரைப் புதைக்கக் கூட சொந்தபந்தம் அயலில் இல்லை. யார் பெற்ற பிள்ளைகளோ....? யார் யாரின் சொந்தங்களோ...? யார் யாரைப் பார்க்க எண்ணி பார்த்திருந்த விழியினரோ? இறக்கும் நொடிப் பொழுதில் யார் யாரை அழைத்தனரோ? யார் மடியில் கண்மூட கடைசி நொடி நினைத்தனரோ? வெட்ட வெளியிலே செத்துச் செத்துக் கிடந்தர் ஐயோ......! இரத்தமும் தசைகளும்  அவியலிட்ட படையலாய் கொட்டிச் சிதறி குவிந்து கிடந்ததையோ...! முளி பிதுங்கி அகோரமாயும்  தலையிழந்து முண்டமாயும் சதசதத்த தெருவெளியாய் சிதறிக் கிடந்தது உடலங்கள்...... குண்டுச் சத்தங்களும் குடலைப் பிழிந்த பட்டினியும் தாங்க முடியா வெம்மை.... விகாரிப்பு மனங்களோடு அங்கம் அங்கமாய்  உருகி உருகி  உயிர் மடிந்தவர் பூமியது. நிம்மதி இழந்து தவித்தோம். நிலமிழந்த மனிதரானோம். கடைசி மரியாதையை  காலங்கடந்து செய்வதற்கும் தகுதியற்ற மனிதர்களின்  தலையீடுகள் தொல்லைய

ஒரு காதலின் முகாரி

Image
---------------------- அன்பே! உன் விழியும் மொழியும் தொட்டுத் தொட்டுத் தீண்டிய இன்பத்தில் இலவம் பஞ்சானது மனச்சிறகு. காதல் படகில் இனிய பயணம்.... கனிந்த உன் சொற்களில் பலாச்சுளை வாசனை .... கனவிலும் உன் திருமுகம் காண்பதால் கண்களுக்கு  இன்ப நுகர்ச்சி..... மௌன ராகத்தில் மலர்ந்து புதைந்து மயங்கிக் கிடந்தேன் நிலை மறந்து... அலையடித்த காதல் சுமந்து கோவில் பக்தனாய் தேடித்தேடி உன் தரிசிப்பை பெறுவதற்கு காரணங்கள் பலநூறை சோடித்தேன். சொர்க்கமே நீ என சுற்றி வந்தேன். காவியக் காதல்கள் பொய்யல்ல உன்னால் உணர்ந்து கொண்டேன். என்னைக் காணும் போது உன் கண்களிலும் காதலிருந்தது. நீ பேசும் போதும் உன் குரலில் காதல் இருந்தது. உனது இதயத்துடிப்பில் எனக்கான காதல் துடிப்பிருந்தது. யார் மீதுமில்லாத கரிசனையில் என் மீதான காதலை உணர்த்தினாய். இப்போதெல்லாம் உனக்கு என்னை நினைக்கக் கூட நேரமில்லை. பேசாதே என்றாய் ..... பார்க்காதே என்றாய்..... அருகிலிருந்தும் அந்நியரானோம். ஏவல் சக்திகளின் நூல் பொம்மை நீயானாய். உன் வேண்டுதல்களை ஏற்று உன் மகிழ்வில் களிகூர்ந்தேன். மௌனங்கள் நிரந்தரப் பரிசானது.

அழகு!☔☔☔☔

Image
வானவில் பூத்த மழை வானம் அழகு... வண்ணங்கள் மாறும் மேகங்கள் அழகு... சில்லென குளிரடிக்கும் மழைக்காற்று அழகு. மழைத்துளிகள் தெளிக்க வரும் மண் வாசம் அழகு.... மழை அழகு! மின்னலும் அழகு! துளிமழையில் நனைந்தாடும் புள்ளினங்கள் அழகு! மழைக்காற்றில் உதிர்ந்து விழும் சருகு இலை அழகு! தூசி  கழுவி சிரித்தசையும் பச்சை இலைகள் அழகு! பறவைகளின் சிணுங்கல் காதில் இசையாதல் அழகு! மேகம் தொட்டணைத்து தாளமிடும் முழங்கு மொழி அழகு! மழை நீர்க்குமிழி மண் துளைத்து மலர்த்தும் கோலம் அழகு! மழை வானம் தொட்டு ரசிக்கும் வையமும் அழகு! மழையழகு! வானழகு! மழைப் பூ மலர்ந்த மண்ணும் அழகு! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

ஏழை அழுத கண்ணீர்.

Image
ஏழை என் உழைப்பை(த்)  தின்ற பூதங்கள் மேடையில் இருந்து கோரப் பற்களையும்  குட்டைக் கழுத்துகளையும் குலுக்கி குலுக்கி  அசைத்து ஆட்டி கெக்கட்டமிட்டுச் சிரித்தன. வேலை நிமித்தம் போன எனைப் பார்த்து. நல்லூரடியான் வீதியை நொந்த மனதுடன் கடந்தேன். முப்புரம் எரித்தவனின் புதல்வன் என் முகாரியைப் படித்துவிட்டான். எனக்காய் அற்புதம் தந்தானடா சனியை சட்டேன அனுப்பி வைத்து நாவால் நாறிப் போக வைத்தான். பூதங்களின் கெக்கலிப்பையும் மயக்கத்தையும்...... அடக்கி என்னை மகிழ வைத்தான். நான்முகனுக்கே நடுமண்டை கிழிய குட்டிக் குதறியவனடா என் கந்தன். அவன் என் காதல் கடவுளடா. அட... ஏழையின் ரத்தத்திலே ஏற்றிய கொடிகள்  காற்றில் அசைவதையும் கடவுள் கண்ணோக்கிப் பார்ப்பாரடா. உன் ஏளனச் சிரிப்பினை நீ ஏழை வயிற்றிலே எரியவைத்தாய். ஏழையின் கண்ணீரடா அது எரிமலையை நிகர்த்ததடா. கேவலப் பிறவிகளே...! அன்றொரு நாள் எந்தன் ஏழை வாசலைத் தட்டி வந்தபோது  உந்த ஏளனம் மறைத்ததேனோ? பிச்சை எடுப்பது தவறல்ல மானிடா... பிச்சைக்காரனிடம் பிச்சை எடுத்து பெருமையாய் உன்னையே பீத்