புலம்ப வைத்த புதிர் நீ....

சித்திரக் குள்ளராய்
நட்சத்திரக் காவலர்
சூழ்ந்திருக்கும் நீ ஒரு
சுதந்திர பவனி...

தேய்வதும் தழைப்பதும் உன்
தேகத்தின் காதல் நளினம்.
மறைந்தொரு  நாள் ஊடலிடும்
அமாவாசை தேடல்.....

தூரத்தில் இருந்துயிரை
துளைக்கின்ற மதி நீ.
சாளரத்தால் கை நீட்டி
சிந்தை அள்ளும் கவி நீ.

நின் அருகில்  ஓடி மனம்
நெருங்கிவிட்ட பிறகும்
நெஞ்சில் வந்து குந்தி நாணம்
நெம்புவது எதற்கு?

அருவி போல அகிலமெங்கும்
அள்ளிவரும் உன் ஒளியை
ஏந்திப் பருகிச் சுவைக்க
பொங்குதே அடி மனசு.

இடை வெளிகள் தான்
இன்பக் காதலின் ஊற்றா?
இரங்கலும் ஏங்கலும் தான்
இரவில் நீ தரும் பரிசா?
புலம்ப வைத்து உயிர் பறிக்கும்
புதிரானாய் நிலவாய்..... வான்
பூங்கொடியில் பூத்த ஏக
வதனக் கனி நீயோ?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹