பைத்தியத்தின் பிறப்பால் பாழானது கோட்டை.
அழகாக கட்டிய
இரத்தக் கோட்டைக்குள்
தப்பிப் பிறந்ததொரு பைத்தியம்.
பைத்தியத்தின் புத்திக் குறைவால்
பத்தி எரிந்தது கோட்டை.
அத்திவாரமாய் நம்பி
குத்தி உலையிலிட்ட
அவியல்கள் நாசமாய்....
இறைப்புக்கள் நாசமாய்....
பைத்தியத்தின் ஆட்டத்தால்....
கற்கள் சிதைந்து உருண்டன.
உயிர்ப்பலிகள் கோரமாய்...
கோட்டை தரைதட்டி உருவற்று
சிதிலமாய் முகவரி தேடலில்...
பைத்தியத்தின் பிறப்பால்
நல்ல கோட்டை வெறிச்சோடி
பயனற்ற பாலைவனமானது.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments
Post a Comment