Posts

Showing posts from June, 2018

இன்னொருத்தியின் கணவன்....

Image
அந்நியனைப்   போல கணவனை சந்திக்கும் கொடுமை எந்த மனைவிக்கும் வரக்கூடாது. எங்கேயோ பார்த்த முகமாக தொலைந்திருந்தது -அந்த வாழ்வு தந்த(ளி)ழித்த முகம். அவனின் கண்களில் ஒளியில்லை. வாழ்வின் எல்லைகளைப் புரிந்திட்ட பக்குவத்தில் அமைதி போர்த்திருந்தான். புன்னகைகள்  புதைத்திருந்தன. காதலித்த அதே கண்கள் தான் இன்றும் அவனைப்பார்க்கிறது. பார்வையில் வித்தியாசங்கள் மிகுதியாய்.......இடைவெளியாய்.... அமைதிசூடிய குரல் அவனோடு உரையாடியது. "நல்ல கணவனாய் வாழத்தெரியலை நல்ல அப்பாவாக வாழ்ந்து விடுங்கள்." பேசவோ திட்டவோ அவள் உரிமை எடுக்கவில்லை. அந்த உரிமையை எடுக்கவும் அவள் தயாரில்லை. குழந்தைப் பருவத்தில் அவளும் தாய் தந்தையை இழந்தவள் தான். இல்லாத தந்தை தாய் ஏக்கத்தின் வலிகளை சுமந்தவள் தான். அப்பாவோடு தோளாடும் குழந்தைகளை ஏக்கத்தோடு பார்த்த விழி அவளது. "இங்கு அப்பா இருந்தும் இல்லாத நிலை. இந்தப் பருவம் இந்தக் காலம் இனி வரப் போவதில்லை. "நல்ல அப்பாவாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள்" அவளின் வேண்டுதல்கள் கேட்கப்பட்டது. அவளின் நியாயங்கள் அவன் இருதயத்தை நனைத்தன. ம

செவ்வரத்தம் பூ...

Image
எல்லோரும் விரும்பும் வள்ளல். விஞ்ஞானத்தின் விந்தை. ஆணும் பெண்ணுமினைந்த அர்த்தநாரி. வரட்சியிலும் தளரா வலிமை கொண்ட ஐந்திதலால் வருடும் "சீனத்து ரோஜா" எண்ணத்தில் வேறுபட்ட மனிதர் போல வண்ணத்தில் வேறுபட்ட நிறமுடையாய். கூந்தலின் இயற்கைச் "சம்போ"வும் நீ குழந்தைகளின் மருந்தும் நீ. நீ இருந்தாலே கோவில்  பூசைக்கும் சிறப்பு. இனத்தை ஒட்டி உறவாடுவதில் நவீனமே விஞ்சும் விந்தை நீ. ஒரு தேடலின் தெவிட்டாத இன்பம் நீ. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija #குறிப்பு:    இக்கவிதை செவ்வரத்தம் பூ பற்றி கவிதை எழுதுங்கள் என கேட்ட  Rubiny Nagaratnam (point Pedro) அவர்களிற்கு சமர்ப்பணம்

பைத்தியத்தின் பிறப்பால் பாழானது கோட்டை.

Image
அழகாக கட்டிய இரத்தக் கோட்டைக்குள் தப்பிப் பிறந்ததொரு பைத்தியம். பைத்தியத்தின்  புத்திக் குறைவால் பத்தி எரிந்தது  கோட்டை. அத்திவாரமாய் நம்பி குத்தி உலையிலிட்ட அவியல்கள் நாசமாய்.... இறைப்புக்கள் நாசமாய்.... பைத்தியத்தின் ஆட்டத்தால்.... கற்கள் சிதைந்து உருண்டன. உயிர்ப்பலிகள் கோரமாய்... கோட்டை தரைதட்டி உருவற்று சிதிலமாய் முகவரி தேடலில்... பைத்தியத்தின் பிறப்பால் நல்ல கோட்டை வெறிச்சோடி பயனற்ற பாலைவனமானது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

தவம்

Image
ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... கடும் வரட்சி....... நாவின் உலர்ச்சி........ கருத்து வெம்மைகள்..... கௌரவ ஊடல்களோடு ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... இயற்கை எமது கைகோர்க்கையில் இதயங்களின் ஈரத்தை வாரி இழுத்து மழையாய் நனைத்து சிலிர்க்கும். கோபத்திலும் கண்டிப்பிலும் உன் பாசத்தை மட்டுமே அன்னமாய் பகுத்துண்கிறது மனம். நீ..... கண்டம் விட்டு கண்டம் ஓடி கண்ணில் படாமல் மறைந்து எங்கு தான் சென்றாலும் ஒரு நாள் வருவாய் காத்திருப்புக்கள் வீணாவதில்லை. வந்து என் வீட்டின் முகட்டை உற்றுப் பார் உனக்காக வாங்கிய தண்ணீர்ப் போத்தல் துடிதுடித்து இறக்காமல் தூக்கில் தொங்கும் வலி சுமந்து தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த........ வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மகிமையில் மகிழ்

Image
தெவிட்டாத முத்தத்தை தெருவுக்குத் தெரு பரிமாறும் வெள்ளைத் தோல் தேசத்தில் அடைக்கலம் புகுந்த அன்னை தேசத்துப் பறவை முத்தம் புனிதமென்றது...... வளர்ப்பும் வழிகாட்டலும் வளமாய் நிறைந்திருந்தால் தேகங்கள் மூடிக்கொள்ளாது தேவையற்ற பண்பாடுகளை..... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வன்னிமகளின்...ஹைகூ... சில...

Image
#கவலை வெற்றுத்தாளில் விழுந்த மைத் துளி. #மகிழ்ச்சி உலகின்  அழகிய இயற்கைச் சித்திரம். #வாழ்க்கை தன்னை நேசிப்போருக்காய் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டம். #நம்பிக்கை சொல்லாமலே செயலாற்றும் சுவாசம். #நினைவு நேரத்தைக் கடந்தோடும் சுழிப்பு சூறாவளி. #ஆசை ஆடை களைந்து வெட்கத்தைத் தேடும் நிர்வாணி. #காதல் மனதின் கனவுப் பறப்பு. #முத்தம் உயிர்த்தலை உறுதிப்படுத்தும் பசளை நீர். #மழை இயற்கையின் இராக ஆலாபனை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

முழுநிலவு ரகசியங்கள்...

Image
முழு நிலா இரவில் மனமோ முந்தி முந்தி சிறகடிக்குது..... கூட்டாயிருந்து குழைத்தொரு உருண்டைச் சோற்றை உண்ட சுகம் அடிநாவில் அமிர்தமாய்...... ஆட்டமும் பாட்டுமாய் முழுநிலவு தழுவ கடற்கரை நண்டு பிடித்திட ஓடிய மணல்வெளி விழிகளிலே..... ஒய்யாரமாய் காட்டுக் கட்டிலில் காற்று வாங்கி முழுநிலவை கண்ணுக்குள் பதித்த இரவுகள் அற்புதம்...... பாட்டிலே தமை மறந்து முழுநிலா முறுவலாய் ஆடிய தங்கையரின் நாட்டியங்கள் சிரிப்புக்கள் கலைந்து போன கனவுகளாய்.... முழுநிலவில் முகிழ்ந்த காதல் கனவுகள் பசுமையாய்.... முழுநிலவுக்கு முத்தமிட்டு இரவுத் தாயை அணைக்கின்றேன். விடியலுடன் சந்திப்போம்.... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

அறியாமை

Image
பூமியின் பச்சைத் தங்கம். புல் வகையில் பெரிய புல். மூங்கில் என்பது அதன் பெயர். ஓங்கி நீண்டு வளரும். காற்றுக்கும் புயலுக்கும் வளைந்து தற்காக்கும். இருந்தும் வண்டுகளின் பற்களுக்குப் பதமாகும். தங்கள் கோரப்பற்களால் துளையிட்டுத் துளையிட்டு மகிழும் வண்டுகள் அறிவதில்லை மூங்கில் ஒரு நாள் புதிய கீதத்தைப் பூமிக்குத் தருமென்பதை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இசைத்தாய்.... இசைத்தாய்...

Image
என்னவோ உன் குரலிசையில் மனம் மயங்கி மந்திர கீதங்கள் பாடுதே.... துள்ளும் இசையில் துள்ளித் துள்ளி மனம் வெள்ளைமுகில் அலையில்  து(டி)ளி நடனம் ஆடுதே..... கள்ளில் மயங்கும் வண்டாய்  மனம் தெள்ளிசையில் மயங்கி மயங்குதே... இரவு நிசப்தத்தில் உன்குரல் மட்டுமே இனிய தாயாய் வருடுதே... இசையும் தாளமும் ஒன்றி உன்குரல் சுடர வைக்குதென் சிந்தையை படரும் நீர்  நிலை உயர உயர எழுகை கொள்ளுதே மனத் தாமரை. வருவாய் நிதமும் சுடராய் ஒளிர தருவாய் குரலமுது குழைத்தூட்டுவாய் சருகும் சிறகசைக்கும் இசையின்ப காற்றில் மலர்வாய் மலர்வாய் இசைக்குயிலே..... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

நினைவுகள் நனைத்துச் சுமக்கும் பஞ்சானது.

Image
அன்புத் தோழியே!-நீ மலர்களின் வாசணையா?.... மழை மேக நீர்ச்சரமா? சூரியக் கதிர்களைப் புதைத்தெழுந்த அக்கினி புத்திரியா? பாலைவனப் பசுஞ்சோலையின் நீர்ச்சுனையா?   -உன் தோழமையின் வாசணை நினைவுகளாய்.... பசுமைகளாய்... உன்னோடு கைகோர்த்துலாவிய இடங்களெல்லாம் உன்னைத்தானே தேடித் தேடி துடிக்கின்றன ... நினைவுத் தடங்கள் நீள மனமோ நனைத்துச் சுமக்கும் பஞ்சானது.... வல்லை வீதிக்காற்று நெஞ்சத்தை தீண்டி கதறியது.. நீ என்னோடு பயணித்த நாட்களை நினைந்து நினைந்து...... நிமிடத்தை உறிஞ்சி உறிஞ்சி நூறு கதையைக் கிளர்த்தியது.. வாய்வாதம் பிடித்த உன் கிரந்தம் பூத்த குரலோசையை காற்று காவி வந்தது போல் பிரமை... எங்கும் தேடிப் பார்க்கிறேன் காணவில்லை . இருளும் ஊர்ந்து செல்லும் வாகனவிளக்குளும் வாழ்வின் தத்துவச் சான்றுகளாய்... மூக்கில் விரல் வைத்து நோக்கிய அதிச நட்பு நமது.... ஆரோக்கிய நட்பில் தியாகங்கள் அத்திவாரம். எங்கள் நட்பிலும் தியாகங்களின் சுவடுகள் நிறைந்திருக்கு. உன்னை வெற்றுக் காற்றில் தோடுகிறேன் விழித்திரையில் கார்மேகத்திடல்  அடைக்கலம் புகுந்து விடைபெறும் அடைமழையாய்.... கடைசியாய் சந்த

இனித்தான் உனக்கு விடிவு காலம்.. சங்குகளே! மெல்லெழுந்து முழங்குங்கள்.

Image
கூத்தாடும் நடிகரெல்லாம் குவலையத்தை கெடுத்து நின்றார். புகைப் பிடித்தல் தடை என்பர் இவர்கள் புகைவிடுவர் புதிது புதிதாய்.... அரை குறை ஆடை கட்டி அங்கங்களை தெரிய விட்டு கெட்டதெல்லாம் பரப்பி நின்றார். வெட்கங்களைப் பறக்க விட்டார். முத்தக்காட்சி முதலிரவு புனிதமிதை எத்தனை வித அசிங்கத்தோடு அரங்கேற்றி பேட்டியும் அலம்பல்களும் சமூகச் சீர்கேட்டை விதைத்தவரை களையாய் கொய்தெறிந்து விழித்திடுங்கள். இராமனால் சபிக்கப் பட்டதாம் ஈழம் இமயமலை போகும் சுருட்டு வாத்தியின் புதுக்கதை.... நரிக்கதை..நஞ்சுக்கதை. தமிழக அரசியல் தலைவர்களுக்கு சபிக்கப் பட்ட மண்ணில் பிறந்த எங்கள் தலைவன் மட்டும் தேவையாம் அரசியல் ஆடு களத்திற்கு.. கூத்தாடிப் பிழைத்தவனுக்கு சிம்மாசன ஆசையா? இமயமலைச் சாமிக்கு உச்சந்தலையில் கோபமா? சாமி தரிசனமும் சாந்த சொரூபமும் பொய்யாகிப் போனது புரிந்திடு. -தமிழா ! வந்தோரை வாழ வைத்து வாழ்வைத் தொலைத்து வயிறு காயும் நிலை எய்தினாய். விழித்திடு கூத்தாடிகளுக்கு விடை கொடு வியர்வை சிந்திய உனது குருதியை உறுஞ்சும் அட்டைகளை அகற்றிடு சிந்திக்கத் தெரியாத சமூகத்தை உருவாக்கிய கூத்தாடி

புலம்ப வைத்த புதிர் நீ....

Image
சித்திரக் குள்ளராய் நட்சத்திரக் காவலர் சூழ்ந்திருக்கும் நீ ஒரு சுதந்திர பவனி... தேய்வதும் தழைப்பதும் உன் தேகத்தின் காதல் நளினம். மறைந்தொரு  நாள் ஊடலிடும் அமாவாசை தேடல்..... தூரத்தில் இருந்துயிரை துளைக்கின்ற மதி நீ. சாளரத்தால் கை நீட்டி சிந்தை அள்ளும் கவி நீ. நின் அருகில்  ஓடி மனம் நெருங்கிவிட்ட பிறகும் நெஞ்சில் வந்து குந்தி நாணம் நெம்புவது எதற்கு? அருவி போல அகிலமெங்கும் அள்ளிவரும் உன் ஒளியை ஏந்திப் பருகிச் சுவைக்க பொங்குதே அடி மனசு. இடை வெளிகள் தான் இன்பக் காதலின் ஊற்றா? இரங்கலும் ஏங்கலும் தான் இரவில் நீ தரும் பரிசா? புலம்ப வைத்து உயிர் பறிக்கும் புதிரானாய் நிலவாய்..... வான் பூங்கொடியில் பூத்த ஏக வதனக் கனி நீயோ? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

காத்திருப்பில்....

Image
காத்திருப்பு விநாடிகள் பாறைப் பளுவாய் ..... மனம் தவநிலையில் கொக்கைப்போல .... சில விநாடிகள் விழிகளும் மொழிகளும் மௌனித்து ஊடலிடும்  இன்பத்து தேடல். உடலின் சுரப்பிகள் நிரப்பி நிற்கும் இன்பச் சுவையில் நர்த்தனம். உன் வரவை உறுதிப்படுத்தும் உதயக் கீற்றுக்காய் தனித்த தவம். படபடக்கும் இருதய தாளத்தில் உனக்கான வரவேற்பு ஒத்திகை. பட்சிகளின் பாடலில் இதயத்தில் நீ ஆடும் கதகளி விருந்து. உன்னுலகில் மலர்ந்தாடும் நிலையை கேலி செய்யும் கடலலையின் கெக்கலிப்பு. அடிக்கடி பூக்கும் உதட்டுப் பூக்களில் ஒட்டு மொத்த உலகும் மயங்கிய மயக்கம். காத்திருப்பு சுகமான சுழற்சி. காத்திருத்தல் சுகமானது. மேனி தழுவாக் காதலிது. மேகத் திரை விலக்கி உன் முகம் பார்க்க உனக்கான காத்திருப்பில் இருதயப் பறவை சிறைப்பட்ட பறவையாய். காத்திருப்பில் விழிகளோ நீண்ட சீனச் சுவராய்....உன் தரிசனத்தை  பருகி ஆனந்திக்க காத்திருக்கிறேன் முகங்காட்டு. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija (ஒரு காலத்தின் பதிவு)
Image
பேரின்பப் பிரசவம் 🍀🍀🍀🍀 அன்பான குரலும் அழகான வார்த்தைகளும் கோர்த்துக் கட்டும் உன் அழகிய மாலையில் இடம் பிடிக்க உள்ளம் உற்சாகப் பூக்களை பிரசவித்துப் பேரின்பமடைகிறது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

முத்தத்தில் மகிமை...

Image
அஞ்சுகமே என் ஆசைக்கனியே யென கொஞ்சுவதில்லையோ தாய் தன் சேயை? நெஞ்சில் சுகமணைக்கு மிணையர் விஞ்சிப் பருகாரோ முத்தத் தமுதை? கஞ்சமனமுடைத்து தோழமையும்               தொட்டுருகி பஞ்சாய் கரம் சூடும் முத்தமு மினிமை தான். மஞ்சமும் மடமும் கண்டறிவதில்லை முத்தம் தஞ்சங்கோரும்  குருகுக்கும் கருணைச்          சுனை முத்தம். இஞ்சித்தும் இரக்கமின்றி முத்தமதை வஞ்சனை மொழியாக்கி கற்பிதம் பூண்டுமே துஞ்சமுடியாத் துயரறைந்து வஞ்சிப்பதழகல்ல மௌனவிருள் அணிந்து. மேதிக்குலத்திற்கும் மேனிக்குள் உயிருண்டு. ஆதி மனிதர்க்கும் அகத்திலே ஒளியுண்டு. நாகரீக தேயத்திலே தெருத்தெருவாய் ருசிக்கும் நாவுச்சுவை ததும்பும் முத்தத் தெவிட்டலை மாபெரும் குற்றமெனக் கூறி யாருமே நயப்பதில்லை. காற்றோடணைக்கும் முத்தத்தால் கள்ளூறி நாற்றாகி விடுவதில்லை இயல்பறி. போற்றிப் புகழும் அகநானூறு சாற்றி நிற்கும் முத்தத் தெளிவை. சோதரரும் சொட்டித் திகட்ட ஆதாரமாயிருப்பது முத்தம். தூற்றித்துடைத்தெறிய முத்தம் நாற்றமல்ல போற்றி நிற்கும் பாசத்து வாயிலது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

எங்கும் கிடைக்காது இந்தவரம் இனியொருக்கால். 💚💚💚❤💚❤❤❤❤❤

Image
பெருந் தெருவுக்கும் புகையிரத தெருவுக்கும் இடைப்பட்டது என் வீடு. வானமும் வான் தொடும் மரங்களும் கழனி(வயல்)யும் பொய்கையும் நிறைந்த எழிலிடம் என் பிறப்பிடம். இரும்புச்சில் ஏறிநகரும் பாதையிலும் விரும்பிப் படர்ந்து பூக்கும் நாணல்கள். முற்றத்தை அலங்கரிக்கும் செவ்வந்தி சீனியாசி. வேலிகள் தோறும் விரைந்து ஊர்ந்தோடி தூங்கித் தொங்கும் குடிகாரப் பூக்கள். தேமாப் பூக்களை காதுகளில் அணிந்து தேவதைகள் போல் நடனங்களிடுவோம். நாயுண்ணிப் பழமும் நாவுக்குச்  சுவைதரும். பூனைப்பழக் கொடிகளில் பழந்தேடிச் சுவைப்போம். மைப்பழங்கள் நகங்களை அழகூட்டும். பூவரசம் பூக்கள் பொம்மைகளாகி நிற்கும். பாவட்டைக் கிளைகளும் பாவாடை உடுக்கும். பூவரம் இலை சுருட்டி பீப்பிகள் ஊதுவோம். தென்னங் குரும்பைகள்  ஈர்க்கோடி ரதமாகும் செவ்வரத்தப் பூக்கள் தேரை அழகூட்டும். சின்னஞ்சிறு குரல்கள் அரோகரா சொல்லி சொல்லி அசையாத சில்லுத்தேரை நூலிட்டு மண்ணோடு அரைத்திழுப்போம். பூக்களை கையிலேந்தி ஒருவர் நிற்க பூவேந்தியவர் கண்ணை இன்னொருவர் மூடிப் பொத்த எவ்விடம் எவ்விடம் எனக்கேட்டு நகரும் இடமறியும் விளையாட்டு இன்பம் தரும். கெந்திக

புரிந்தால் பூத்திடு....பூத்ததைக் காத்து வை....

Image
வாழ்க்கைச் சக்கரத்தை உணராது வதைக்கும் கல் நெஞ்சுக் காரர்களே..! நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? பிறக்கும் போதே ஒன்பது துவார ஓட்டைச் சட்டையோடு ஒரு பிறப்பு. ஏழு ஓட்டைகளை முகத்தில் பதித்து அதிசய கண்காட்சிக் கூடமாக... ஒரு சிலிர்ப்பு.... நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? இருட்டுக்குளத்தில் இரத்தமூறிய வெடில்நீரில் முக்குளித்து அழுகையுடன் அவதிப்பட்டு வந்த போது வெளிச்சத்தை கண்டு  கூசிய கண்கள் இன்னும் முழுமை காணவில்லையா? நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? ஓடும் நீரில் மறையும் விம்பமாய் நிலையற்றதிந்த வாழ்வு... ஆட்டம் காணும் தோல்பை சுருண்டு ஓட்டம் காணும் விரைந்து... வாழும் காலத்தில் வடுக்களை வரைந்து காணப் போகும் சுகம் என்னவோ? நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? ஆண்ட அரசனும் மாண்ட பின் மண்ணுக்குள் தானே புதையுண்டு போவான். வாழும் காலத்தை வசந்தமாக்காது சிறகுகளை அறுத்து எறிவதுமேன்? நீங்களெல்லாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.? உலகம் இருப்பதும் நிச்சயம் இல்லை. ஒண்ட வந்த இடமும் நிச்சயம் இல்லை

திணிக்கப்பட்ட துறவும்..... பறிக்கப் பட்ட காதலும்..........

Image
எனக்கென்று பல பிறவிகளில்லை. எடுத்த பிறவியை இன்பமாய் நகர்த்தவும் நீங்கள் விடவில்லை. பெற்றவளுக்கு பிறப்பிடக் கவலை போதித்தவருக்கு நானொரு பலிக்கடா. இளமையில் துளிர்த்த காதல் அரும்புகளை பொத்திப் பொத்தி மூடி நடிக்க நான் பட்ட அவஸ்தை யாரறிவீர்? சாதாரண அழகி தான் நானும். என்னையும் ஒருத்தன் துரத்தித் துரத்தி காதலித்தான். இருவருக்குமிடையில் சமூக ஏற்றத்தாழ்வு மடுவும் மலையும் போல.... அவனிடமிருந்து காதலைப் பிடுங்க என்னை ஒளித்தீர்கள். மறைப்பிட்டு மாயமிட்டீர்கள். உண்மையைச் சொல்லுங்கள் அரச இளவலை ஒரு ஏழைமகள் கரம் பிடித்திடுவாள் என்ற கசப்புணர்வில் தானே துறவு என்ற ஒன்றை எனக்குள் திணித்தீர்கள்.? எத்தனை வேடத்தை எனக்குத் தரித்தீர்கள். துறவு மறைவில் என்னை ஒரு மாற்றான் மனைவியாக்கினீர்கள். இது தான் துறவின் தூய்மையா? என்னை நேசித்தவனின் உண்மைக்காதல் அன்று வாளுக்கிரையாகி துடித்தது மண்ணில்... கதறித் துடிக்கும் என் மனதை மாற்ற நாடுகாண் பயணியாக்கி சுற்றுலாவுக்கு அனுப்பினீர்கள். காதலின் துயரம் எத்துணை கொடியது உணரவில்லையே நீங்கள். காதலின் துயரினால் தான் நான் மனம் மருகி துறவை து

கானகத்துப் பாடல்...🌵🌾🌵🌾🌵🌾🍂🌾🌵

Image
கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கும் ஓர் அடவியில் அண்டங்காக்காய் அரிதாய் வரும். காட்டுக்கிளைகள் தாவித்தாவி கோகிலமும் கூவிப் பாடும். மஞ்ஞை(மயில்) மழை கண்டு கண் விரித்து களிப்பூட்டும். சில்வண்டு சுருதி போடும். சிலவேளை மந்தி பாயும். காட்டுப் பழங்கள் கண் சிமிட்டும். கானகமும் சோலை நிகர்த்த இன்பத்தை அள்ளித் தரும். உடும்போடும் முயல் ஓடும் மானினமும் மருண்டோடும். காட்டுக்கோழி வேகங் காட்டும். சர்ப்பங்கள் நெழிந்தசையும். யானை வந்த தடமிருக்கும். சருகுகள் படபடக்கும். பாலையுடன் உலுவிந்தைப் பழம் கனிந்து பளபளக்கும். பூனைப்பழம் நாயுருவி பூக்களும் புன்னகைக்கும். முதலிப் பழம் சுவையூட்டும். மைப்பழங்கள் வர்ணம் தரும். காரைக்காய் சூரைக்காய் முள்சூடிக் கனிந்திருக்கும். சிற்றிதழ் செடி கொடிகள் பற்றிப் படர்ந்து பசுமை சேர்க்கும். காட்டுக் கொடிகள் தாகந் தீர்க்கும். பாசியுடன் படர் கொடிகள் மேலுயர மரம் தாவும். முகிலினங்கள் நிலமடந்தை முகம் பார்க்கத் தவங் கிடக்கும். கருவேலை கருங்காலி முதிரை பாலை நெருங்கி நின்று குடைபிடிக்கும். ஆலங்கொடிகள் ஊஞ்சலாகும். ஆளை உருக்கும் அனலடிக்கும். ஆ

வாசனைத் தடங்கள்....

Image
நீண்ட காலத்தின் பின் நீரணைத்த விழிகளுடன்..... உடைந்த  கண்ணாடிக் கீறலாய் உதிரத்தைச் சுவைத்த வார்த்தை வீரியம்..... முத்துக்கள் பதித்த நெஞ்சில் முட்கள் கீறிய தடயங்கள் வலுவாக...... அலையடிப்பில் சிதறும் நீரில் கரையுடைக்கும் வலிமைச்சொல்லலை.... கால நகர்வில் ஒரு பொழுதுன்னை காண நேரின் உடைந்திடலாம் பொறுத்திடு... கலகலத்த இரட்டைக்கிளவி போல் மனதை சிலுசிலுக்க வைத்த ஞாபகங்களைத் தேக்கி வைக்கிறேன். மணம் வீசட்டும் மல்லிகையாய்.. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija

நான் காதலிக்கிறேன். காதலித்துக் கொண்டே இருப்பேன்

Image
நான் காதலிக்கிறேன்.. காதலித்துக் கொண்டே இருப்பேன். என் காதல் இறகுகளை வலிந்து சிறைப்படுத்தி மூட நான் தயாரில்லை. பரந்த இந்த வான் பரப்பில் விரிந்து சிறகடிக்கும் என் காதல். காதல் உயிரில் உரிமையுடையது. காதல் உரிமையை தொட்டுணர்த்தியது. காதல் தாய் மடியணைப்பைத் தந்தது. காதல் மண் மகத்துவத்தை நிறைத்தது. காதல் இருப்பின் பெறுமதியை உணர்த்தியது. காதலில்லா வாழ்வு கரும்புகை மூட்டமே. காதல் தாயின் கருப்பையில் பூத்த தேவதரு வாசனை. கருப்பை உதைத்துக் கிழித்து பூமி வந்த ஜீவனை அள்ளியணைக்கும் தாயும் பஞ்சபூதங்களும் காதலின் வலியில் அகம் குளிரும் அற்புத சக்திகள். காதல் வலியில் பூத்து வசந்தம் தரும் பூஞ்சோலை. காதலில்லாத வாழ்வுக்குள் மூடிப் புதைந்து செத்துப்போக நான் தயாரில்லை. காதல் ஒன்றில்லாவிடில் என்றோ காணாமல் போயிருப்பேன். எத்தனை விதமான காதல் என் நெஞ்சத்தில்... சில பச்சையம் பூசிய பசுமையாய்.... சில இரத்தமாயும் சுடும் தீயாயும்.... இளமையின் வசந்தங்களை இனிய நினைவுகளை என் இருப்பின் அடையாளத்தை தேடவும் தக்க வைக்கவும் நொடிக்கு நொடி துடிக்கும் துடிப்பில் காதலுள்ளது. வலிக்காத காதல்
விசித்திரம் 🍀🌷🍀🌷🍀 ஆடாதோடை செடியில் செய்த பாவைக்கும் பக்குவமாய் துணியுடுத்தி பெண்மையை ஆண்மையை போற்றிய சமூகம் எமது.-இன்று நிர்வாண பொம்மைகள் தெருத் தெருவாய் வந்ததால் நிர்வாணமாகியது மனிதம். அன்று செடிப் பாவைக்கு ஆடையுடுத்தி மானங்காத்த வழிகாட்டல்... இன்று இறப்பர் பொம்மைகளுக்குள்ளும் அங்கங்களைத் தேடும் விசித்திர வியாதியாய்.... இன்னும் சங்கமருவிய காலத்தில் புதைந்து பெண்களின் அங்கவர்ணிப்பில் மதிமயங்கிய கவிக் கூட்டத்தின் அலப்பறை. நவீனத்தை சுமந்து விரைந்தோடும் உலகபந்தை உதைத்து உருட்ட துடிக்கும் துடிப்பு மிக்க காலத்தில் பாடுவதற்கு எவ்வளவே பரந்திருக்க விரகத்தை கால்களிடைத் தேடும் விசித்திர மன நோயுடன் தலைகளை கால்களிடைப் புதைத்து கனவில் மெய்யுருகிக் கரைகின்றன. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
Image
சிறகுகள் உந்தி எழுந்து பிரபஞ்சத்தை வலம் வரட்டும் 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚 இனியவளே...! அதிசயங்களை அணிந்து அவதரித்த படைப்பு நீ. கண்களால் கண்டறியும் படைப்புக் கடவுள் நீ. என்ன சாதித்தாய் என ஊர் உன்னைக் கேலி செய்தால் உதரத்தை( வயிற்றை) தடவி தலை நிமிர். உலக உற்பத்தியை நிர்ணயிப்பவள் நீ. சாதிக்கப் பிறந்தவள் நீ சாதித்துக் காட்டிய வல்லரசி நீ. உன்னைச் சூழ்ந்த அரக்கரின் உதிரிழைச் சொற்களுக்காய் வருந்தாதே.! குரைக்கும் நாய்களுக்கு கல்லெடுத்தால் சிறக்காது சாதனைப் பயணம். ஆற்றல் அரசி நீ. அறிவுக் களஞ்சியம்  நீ. ஏற்றும் சுடராய் எழுந்தாடும் கவித்துவம் நீ. சமூகச் சிந்தனைச் சிறகு முளைத்த சுதந்திரப் பறவை நீ. வெட்டிக்கதைகளை வேரோடு அணைக்காதே கெட்டித் தனங்கள் கெட்டுப் போயிடும். கூண்டுகள் பாதுகாப்புக்கு மட்டுமே. குந்தியிருந்து குடல் நிரப்ப அல்ல. திட்டமிடலும் திகட்டும் ரசணையும் வட்டத்துக்குள் வாழ்வோர்க்கு வராத கலை காண். குண்டஞ்சட்டிக் குதிரைகளை குப்பைக்குள் தூக்கி எறி. வேர்களை நாசம் செய்யும் உழுவான்கள் ஆபத்தானவை. அன்பை அடிமை சாசனமாய் கருதும் அந்நிய மனங்களை கண்டுணர்- உன் சிறக