Posts

Showing posts from October, 2018

குறித்துக்கொள். மறவாதே....❤

Image
இதயத்தில் குடியிருக்க வந்துவிட்டு இடம் மாறத் துடிக்கிறாய். நான் வெளியேறி விட்டதாய் நீயாக கற்பனை செய்கிறாய். உனக்குத் தெரியாதா ஒரு தடவை இதயத்தில் குடி புகுந்தால் இரத்தச் சுற்றோட்டம் போல வெளியேற முடியாதென. இந்த மூச்சு உடலை விட்டு நிரந்தரமாய் பிரிகையில் தான் உனக்கும் எனக்குமான உலகப்பிரிவு. குறித்துக் கொள். அது வரை உன்னை இதயம் பாடலோடு தாலாட்டும். அடிக்கடி முத்தத்தால் குளிப்பாட்டும். நினைவுகளில் பசுமையாய்...... பூத்திருப்பாய். மறவாதே. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வறட்சி நீங்கி அடைமழை பொழிவாய்

Image
. 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 கொஞ்ச நாளாக அதிக அனலடிப்பு. வறட்சியின் உச்சத்தால் ஆடை தேய்ந்து அம்மணமாகும் கதி கலக்கத்தில் பூமித்தாயின் பெருமல். அவளின் ஏக்கமும் துக்கமும் பெருமூச்சாகி நிலம் பிளந்து வெடிப்புகளை வகிர்ந்தன. அவளின் மெல்லிய பசும் பட்டாடை வண்ணம் கலைந்து சருகுச் சேலையாக கருகிக் கொண்டது. வருந்தி வருந்தித் துடித்ததிலே வதன அழகும் பொலிவிழந்தது. பூத்துப் பூத்து இன்பம் தந்தவள் புளுதி குடித்து காற்றுடன் பறந்தாள். பூமிக்கும்  ஆதவனுக்கும் நடந்த ஊடலின் தகிப்பில் அவர்களை நம்பிய உயிர்களும் நடைபிணம் ஆகின. கரும் மேகங்களைத் திரட்டியுருட்டி கடும் கோபத்தைக் காட்டிய சூரியதேவன் குளிர்ந்து இளகிய தேவியின் மீது ஆவியாய் வந்து அணைத்திடத் துடிக்கையில் பிரிந்தோர் கண்ணீரின் மடைதிற அருவியாய் அடைமழை பலதினம் பெருகிப் பொழிந்தது. ஒப்பற்ற அன்புக் கூடலை உலகோர் ஓடி ஒழிந்தொரு கண்வழி நுகர இல்லத்து சாரளவழி தனில் கண்டே உல்லாசமாய் நுகர்ந்தனர் இன்ப தரிசனம். இரவும் பகலும் இனிதான நனைதலில் இயற்கையன்னை புதுவுடை தரித்தாள். பசுமை மீண்டும் பட்டாடையானது. பூத்தலும் காத்தலும் புதுமெர
Image
ஈழத்தின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் மகிழினி காந்தன் தற்போது புலம் பெயர்ந்து சுவிச்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார். அவரின் முதற் தனிப்படைப்பாக" இதயத்தின் சிலிர்ப்புகள் " என்ற கவிதை நூல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அச்சேறியுள்ளது. கவிதையின் பாடு பொருளாகத் தந்துவங்கள் பொதிந்துள்ளன. 66 பக்கங்களைக் கொண்ட இந்தக் கவிதைப் புத்தகத்தை தமிழ்நாட்டு காகிதம் பதிப்பகத்தார் அச்சிட்டு வடிவமைத்துள்ளனர். அணிந்துரையினை யாழிசை மணிவண்ணன் வழங்கியுள்ளார். பதிப்புரையினை மறைந்த நல்லுள்ளத்தோன் மனோபாரதி வழங்கியுள்ளார்.           தந்தையார் தமிழ்மீது கொண்ட பற்றையும் தன்னைத் தமிழ்படிக்க ஊக்குவித்ததையும் என்னுரையில் பதிவு செய்துள்ளார்.200 குறுங்கவிதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை அமரத்துவம் அடைந்த தனது தந்தைக்குக் காணிக்கையாக்கியுள்ளார்                      தன் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லும் திறன் கொண்ட மகிழினி காந்தன் குறுகிய வரிகளில் நிறைவான கருத்துக்களை விதைத்துள்ளார். கவிதை என்பது ஒரு பக்கப் பார்வையன்று. அது பல்லுருக்காட்டி. பார்ப்பவர் மனநிலையைப் பொறுத்து அதன் பிரதிபலிப்பின் வீர

உனை சேர்ந்தே கலந்திருப்பேன். 🇮🇨🇦🇱🇰🇸🇬🇨🇭🇨🇦🇻🇳🇲🇺🇮🇩🇹🇭🇦🇪🇹🇷🇺🇧🇪🇸🇸

Image
இருதயம் துடிப்படங்க தகிக்கையில் உனது குரல் மொழிக் காற்றசைவு உயிரூட்டும் வந்திடு. முட்டைகள் எல்லாம் மினுக்கத்தில் அழகதே. குத்தாதே உயிர் கொஞ்ச நாள் வாழட்டும். மகிழ்"வூட்டும் கலையுனது அகத்தெரியும் அனல் குறைப்பாய் என்பால் ஒளியேற்று அன்பால். உயிர் மூச்சு பிரிந்தாலும் உலகத்தை வலம் வந்து உனை சேர்ந்தே கலந்திருப்பேன். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

செத்தபின் விழித்துக் கொண்டவன். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

கண்ட இடமெல்லாம் கறையான் புற்றாக காவியுடைக் காதலாய் முற்றும் துறந்தவனின் எழுகை. துட்டுப் பெற்ற எட்டப்பர் நாவுகள் கொட்டும் பொய்யுரை கறைபடிந்த வடுவாய். காலத்தில் பதிவாய். கட்டிய மனைவியை பெற்றிட்ட பிள்ளையை சற்றும் நினையாது ஓடிய அரச சம்சாரி முற்றும் துறந்த முனிவனாகினான். காலம் அவனைக் கடவுளாக்கியது. அவன் போதனைகள் பெருமை பூத்தன. இரத்தமும் கண்ணீரும் மனிதர்க்கு ஒத்த நிறமென்று ஓதியவன் சித்தங் கலங்கி உலக சுகம் வெறுத்தவன் செத்த பின் விழித்துக் கொண்டானோ செய்தது பிழை என்று ஆ ?😄😃 அதனால் தான் கண்ட இடமெங்கும் கறையான் புற்றாக கொண்டெழத் துடிக்கிறானோ யசோதையின் கணவன் ? வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija

கரும்பெல்லாம் இரும்பாகி சுட்டெரிக்கும் மாயம் இது. 💤💤💤💤💤💨💨💨💤💤💨💨

Image
நேற்றுவரை மன மலையில் ஏற்றம் கொண்ட மாளிகையை காற்று வந்து சுழன்றடித்து முறித்தடித்த கனதியினால் கதவுகளும் உடைந்தனவே பாழடைந்த வீடாக மன வீடும் ஆனதுவே. சூறாவளி ஓய்ந்த பின்பும் ஆறாவலி சுமந்து விழிநீர் தாராய் உகுந்துதிர்க்க வேரோடு மணம் கமழும் உன் நினைவுகளே நிறைந்திருக்கு. தேமாப் பூவின் வாசனை உன் நினைவு. தேம்பும் உடல் உருக்கில் வலிந்திழுக்கும் மெய்யுணர்வு. வதனமிழந்த வதைப்பு. வார்த்தைகளால் கோர்க்க முடியா தொகுப்பு. இயந்திரமாய் கழற்றி மாற்றும் இதயம் இருந்திருந்தால் சூறாவளி என்ன....! சுனாமி வந்தாலும் புதிதாய் ஒன்றைப் பூட்டிடலாம். நினைவுக் கோர்வைகளை மறக்க மாத்திரைகள் கண்டிருந்தால் பெருகும் துயரலைகள் கரைந்தோடிப் போயிருக்கும். இயல்பாய் இருப்பதென நடிக்கவும் முடியுதில்லை. இனியொரு விதியென எழுந்திடவும் முடியுதில்லை. பெருந்துயரைப் புதைத்து விட்டு நகரவும் முடியுதில்லை. ஏனிந்த துயரென்று தவிக்காத நாளுமில்லை. எரிமலைக் கொதிப்பாக விழிநீரும் ஓயுதில்லை. கரும்பெல்லாம் இரும்பாகி சுட்டெரிக்கும் மாயம் இது. மீண்டிடத் தான் துடிக்கிறது இதயம்.-தவறி மாண்டாலும் கொன்றவர்கள் வந்தி

வலிதான சிறகுகள் வேண்டும். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Image
விண்ணைத் தொடக் கனவு சுமந்த எண்ணிலா மழலை உலகம் விற்பனைச் சந்தையிலே விலையாக விலையாகி.... துட்டர்களின் துருப்பிடித்த கரங்களிலே சிட்டுக்களின் சிறகுதிர்வு  வதையாக.... வயிறு காய்ந்து வற்றித் தவிக்குது உலகை ஆளும் இளைய சந்ததி. பாலகக் கடவுளரை அரக்கருலகம் பட்டாசுத் தொழிலாளராய் சிறைப்பிடிப்பு. சிந்தை சுருங்கும் மந்த நோய்களால் நொந்து நலிகிறது பிஞ்சுப் பசுமை. போதையுலகம் புகுந்து நல்ல பாதையைப் பிளந்துதிர்க்க வஞ்சக வாதை செய்வோரும் இப்போ வாழ்கிறார் ஒரே வீட்டினிலே... பூக்களை இரசிப்பதற்கு செடிக்கு காப்பிடல் அவசியமே...சிறுவர் உலகினைக் காப்பதற்கும் சிறகுகள் வலிதுடன் வேண்டுமிங்கு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... கடும் வரட்சி....... நாவின் உலர்ச்சி........ கருத்து வெம்மைகள்..... கௌரவ ஊடல்களோடு ஒரு தண்ணீர்ப் போத்தல் தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த..... இயற்கை எமது கைகோர்க்கையில் இதயங்களின் ஈரத்தை வாரி இழுத்து மழையாய் நனைத்து சிலிர்க்கும். கோபத்திலும் கண்டிப்பிலும் உன் பாசத்தை மட்டுமே அன்னமாய் பகுத்துண்கிறது மனம். நீ..... கண்டம் விட்டு கண்டம் ஓடி கண்ணில் படாமல் மறைந்து எங்கு தான் சென்றாலும் ஒரு நாள் வருவாய் காத்திருப்புக்கள் வீணாவதில்லை. வந்து என் வீட்டின் முகட்டை உற்றுப் பார் உனக்காக வாங்கிய தண்ணீர்ப் போத்தல் துடிதுடித்து இறக்காமல் தூக்கில் தொங்கும் வலி சுமந்து தவமாய் தவமிருக்கிறது உன் இதழ்களை ஈரப்படுத்த........ வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மந்தி கலை(லாய்)ப்பு...

சு....சு.... மந்தியை கலையுங்கோ ..... கொப்புக்களை கிளைகளை முறிக்குது. பழங்கள் காய்ந்த பிஞ்சுகளை வீணாக்கி காலடியில் நசுக்குதே...! அலம்புது புலம்புது அங்குமிங்கும் தாவுது. அடாத்தாய் ஓடி ஓடித்துள்ளுது. அடிக்கடி அலம்புது. சொறியுது பிராண்டுது சன்னை காட்டிக் கத்துது. சு... சு.... மந்தியை கலையுங்கோ... மரங்கள் உரு மாறுது வளங்கள் கெட்டுப் போகுது- எங்கள் மாண்பும் கெட்டுப் போகுது. சு.... சு..... மந்தியை கலையுங்கோ. வெண்கலக் கடைக்குள் யானையாய்-இந்த கண்கடை அற்றது ஆடுது. கசிப்புக் குடிச்ச மந்தியோ? இல்லை கலப்பில் வந்த சனியனோ? ஐயோ! தோட்டந்துரவை நாசமாய் இந்த கொழுத்த மந்தி பிராண்டுதே.! முன்னோர் வியர்வை சிந்தி நட்டதை சின்னோர் விலங்கு வந்து கிளறுதே.! ஐயோ! விழித்த விழியராய் வாருங்கள் மந்தியை மரத்தை விட்டுக் கலைத்திட. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா 04:42PM

வெளிச்சத்தை மூடிவிட்டு வெளிச்சம் தேடும் வித்தகர்கள்.

Image
வீட்டுக்கு வந்த தரகர் கேட்டார் மாப்பிள்ளை அரச உத்தியோகமோ?..... பெட்டைக்கு ஒரு அரச வேலை கிடைக்க வேணும் . உணவை ஒறுத்து அம்மா கடும் விரதம் ........ சமூர்த்திச் சங்கத்தில கால் கடுக்க செல்பட்டுக் காலிழந்த அப்பா. அரச பணத்துக்காக... "கண்கெட்டுப் போவார் இன்னும் வீட்டுத்திட்டம் தரேல்லை." அரசாங்கத்தை திட்டித் தீர்க்கிறாள் பக்கத்து வீட்டுக்காரி...... அதிகாலையில் தம்பியும் தங்கையும் ஓடுகிறார்கள் தூக்க முடியாத அரசின் இலவசப் புத்தகங்களுடன்.... எடுத்தது பாதி எடுக்காதது பாதியாய் ஓடுறா அத்தை அவா அரசாங்கப்பள்ளிக்கூட ஆசிரியர்...... கோழி மேய்த்தாலும் கவர்மன்ற் கோழி மேய்க்கோணுமென்று வேலையில்லா பட்டதாரிகள் வேலைதேடி... கிராம அலுவலர் வரட்டுமாம் ஏதோ குடுக்கப் போறாராம் நீண்ட வரிசையில் எதிர்பார்ப்போடு மக்கள்.... அரச வேலை வேணும் அரச சம்பளம் வேணும். அரச படிப்பு வேணும். அரச சாமான் வேணும். அரச சசலுகையும் வேணும் இதுக்கெல்லாம் வராத வெட்கம். இதுக்கெல்லாம் பற்றி எரியாத புத்தி வெளிச்சம் வெசாக்கூடு வெளிச்சம் பட்டதால் கூசுதாம் குறுகுதாம். வேடிக்கையா இருக்குதடா.

ஒரு காதலின் முகாரி

Image
அன்பே! உன் விழியும் மொழியும் தொட்டுத் தொட்டுத் தீண்டிய இன்பத்தில் இலவம் பஞ்சானது மனச்சிறகு. காதல் படகில் இனிய பயணம்.... கனிந்த உன் சொற்களில் பலாச்சுளை வாசனை .... கனவிலும் உன் திருமுகம் காண்பதால் கண்களுக்கு  இன்ப நுகர்ச்சி..... மௌன ராகத்தில் மலர்ந்து புதைந்து மயங்கிக் கிடந்தேன் நிலை மறந்து... அலையடித்த காதல் சுமந்து கோவில் பக்தனாய் தேடித்தேடி உன் தரிசிப்பை பெறுவதற்கு காரணங்கள் பலநூறை சோடித்தேன். சொர்க்கமே நீ என சுற்றி வந்தேன். காவியக் காதல்கள் பொய்யல்ல உன்னால் உணர்ந்து கொண்டேன். என்னைக் காணும் போது உன் கண்களிலும் காதலிருந்தது. நீ பேசும் போதும் உன் குரலில் காதல் இருந்தது. உனது இதயத்துடிப்பில் எனக்கான காதல் துடிப்பிருந்தது. யார் மீதுமில்லாத கரிசனையில் என் மீதான காதலை உணர்த்தினாய். இப்போதெல்லாம் உனக்கு என்னை நினைக்கக் கூட நேரமில்லை. பேசாதே என்றாய் ..... பார்க்காதே என்றாய்..... அருகிலிருந்தும் அந்நியரானோம். ஏவல் சக்திகளின் நூல் பொம்மை நீயானாய். உன் வேண்டுதல்களை ஏற்று உன் மகிழ்வில் களிகூர்ந்தேன். மௌனங்கள் நிரந்தரப் பரிசானது. நவீன இயந்திரக் கடல்களாய

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

Image
அரசியல் சூதாட்ட அகங்களின் கபடத்தில் அகப்பட்டுச் சிதறியது அடைகாத்த இலட்சியம். சுய நலப் பிரிவுகளால் சொந்தங்கள் நடுத்தெருவில். உயிர்களின் இழப்புடன் தேசத்தின் துகில் உரிப்பு..... இரகசிய அமைதியில் தலைவனைத் தேடி காலக் காத்திருப்பு நீட்சியாய்.... வரமாட்டான் இனித் தலைவன் என்று இறப்பு சான்றிதழ் இல்லாமலே தலைவனுக்குப் போட்டியிட்டன பன்றிக் கூட்டங்கள். பஞ்சமா பாதகங்கள் பரந்தன தேசத்தில்... தலைவிரி கோலத்துடன் தரங்கெட்ட அரசியல்... ஆசன ஆர்வலரின் ஆசனங்களுக்கு  தீ மூட்ட அனுமானின் வால் நீள்கிறது .... பஞ்ச பாண்டவர்கள் தோன்றித் தொடுத்த போரில் மீண்டு கொண்டனர் தேசத்தை மீண்டும். அஞ்ஞாதவாசம் பன்னிரண்டு ஆண்டுகளை புதைத்துக் கிளர்வது. புரியாதவர்க்கு இது புதிர்க்கதை தான். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

அதிசயமே அதிசயிக்கும் ஆற்றல் அரசியம்மா

Image
அம்மா! உன் வயிற்று உதிரப் பன்னீர் கலந்த உத்தமப் பொய்கையில் மிதக்க என்ன தவம் செய்தேனோ?❤ தொப்பிள் கொடிவழி பசியாறி நீந்திச் சுழித்து நீச்சலடிக்கையில் வயிற்றுச் சுவற்றில் வலுவாய் இடிக்கின்றேன். இடித்த போதெல்லாம் இதமாய் தடவி இன்புற்றுவது ஏனம்மா.? ஆசைக் கதைகளும் ஆற்றல் மிகு உணவுமிட்டு முகம் தெரியா உறவு என்னை முழுவதுமாய் ரசிக்கிறாய் நீ. இதோ  ! எட்டி எட்டி உதைக்கின்றேன் கட்டிக் கட்டிப் பிடித்துந்தன் கரங்கள் மகிழ்கிறதே.- நீ அதிசயமே அதிசயிக்கும் ஆற்றல் அரசியம்மா. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija ஓவியத்தின் உரிமையாளர் மகிழினி காந்தன்

புல்லரிக்கும் புதுச்சுகம்

Image
என் அருமைத் தம்பியே நீ யாருக்கடா சாமரம் வீசுகிறாய்? பன்றியோடு சேர்ந்த பசுக்கன்று ஆனாயேடா...? நீ யார்? உன் வம்சம் என்ன? அறிந்து நிமிர்ந்திடடா. அரச பரம்பரையின் மிடுக்கோடு பெண்களும் பெருவீரம் கண்ட மண் உனது. முதியோரும் முள்ளந்தண்டை நிமிர்த்தி அணிநடை பயின்ற மண் உனது. செருக்களத்தில் உன் தலைவன் செருமினாலே எதிரிகள் காலோடு சலமோடும் . சதிவகுத்த சகுனியர்கள் வென்ற கதை நீயும் அறிவாய். வீழ்ந்தது ஒரு காலப் பதிவெனில் எழுவதும் ஒரு சூரிய உதயமடா. செங்குறுதி பாய்ந்த மண்ணை செந்தமிழால் பூத்த மண்ணை பங்கமுறு செய்கைகளை அறுத்தமண்ணை பிழைப்புக்காய் கரம் நீட்டி உழைக்கின்ற சொறி நாய்க்கு சாமரம் வீசுகிறாய் விழித்திடடா. நீ எங்கள் தேசப் புதல்வனடா.. தமிழீழத்தின் முத்தடா. கூத்தாடிகளுக்கும் உனக்கும் சம்மந்தமேன்?  விலகிடடா. உன் தேசக்காற்றை வாழவைக்க உன் கரங்களால் பசுமை சேர். மாற்றான் வீட்டு மாங்காய் இனிக்காது. வியர்வை சிந்தி நீ நட்ட மாமரம் பூத்துக்கனியப் பிடிங்கி உண்பது புல்லரிக்கும் புதுச்சுகம் உணர்ந்திடடா. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

பாழடைந்த சுவர்கள்

Image
அழகான வீடாக்கி என்னை அழகாய் அலங்கரித்து மணமகள் வாழ்விடமாய் தரை வார்த்தார் தந்தையவர். திருமணக் கோலத்துடன் மணப்பெண் அழகிய நாணத்துடன் கதவை மூடியே கும்மிருட்டில்  ஆசையாய் சுவர் என்னில் சாய்ந்திருக்க நல்ல கதைபேசி காதலுடன் இங்கு குதூகலித்து இன்புற்றனர். கண்களை மூடிய இருள் காதினை மூடவில்லை... அடுத்தவர் விடுப்பறியும் ஆசை யாருக்கில்லை...? கூடிக்களித்தவரால் பல குட்டிகள் பிறப்பெடுத்தார்..அவர் சுட்டித்தனங்களிலே நானும் சுந்தர வடிவங் கொண்டேன். இனவாத குண்டுமழை நாட்டில் எங்கனும் விழுந்தது காண். வீட்டுச் சொந்த பந்தமெலாம் அயல் நாட்டைச் சேர்ந்தன பார். தன்னந்தனியனாக நான் தனித்து தவமிருந்தேன். சில கள்ளப் படை வந்து கதவு யன்னலைக் கவர்ந்தன பார். பின்பு கூரை பிரித்தெடுத்தார் என் அழகையும் உருக்குலைத்தார். நாசமறுவார் சிலர் வந்து நடுவீட்டில் மதுக் குடித்தார். சில மோச ஆசாமிகள் வந்து கஞ்சா கசிப்படித்தார். நான் நொந்து நூலாகி பெரும் துன்பத்தில் துவண்டிருந்தேன். பட்டப் பகல் ஒரு நாள் அந்த துட்ட இளைஞனுடன் ஒரு பெட்டைக் கழுதை வந்தாள். அவசரக் காதல் அது மிக அவசரம் படபடப்பு ஐயோ! க

வலிதான சிறகுகள் வேண்டும்.

Image
விண்ணைத் தொடக் கனவு சுமந்த எண்ணிலா மழலை உலகம் விற்பனைச் சந்தையிலே விலையாக விலையாகி.... துட்டர்களின் துருப்பிடித்த கரங்களிலே சிட்டுக்களின் சிறகுதிர்வு  வதையாக.... வயிறு காய்ந்து வற்றித் தவிக்குது உலகை ஆளும் இளைய சந்ததி. பாலகக் கடவுளரை அரக்கருலகம் பட்டாசுத் தொழிலாளராய் சிறைப்பிடிப்பு. சிந்தை சுருங்கும் மந்த நோய்களால் நொந்து நலிகிறது பிஞ்சுப் பசுமை. போதையுலகம் புகுந்து நல்ல பாதையைப் பிளந்துதிர்க்க வஞ்சக வாதை செய்வோரும் இப்போ வாழ்கிறார் ஒரே வீட்டினிலே... பூக்களை இரசிப்பதற்கு செடிக்கு காப்பிடல் அவசியமே...சிறுவர் உலகினைக் காப்பதற்கும் சிறகுகள் வலிதுடன் வேண்டுமிங்கு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija