Posts

Showing posts from September, 2018

பிறப்பிக்கும் இறைவிகளை சிறப்பாக மதியுங்கள்.

Image
    பெண் என்ற பெரும் படைப்பு கடவுள் தந்த வரம். சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பெண்ணாகப் பிறந்ததை சாபமாக கருதினாலும் ஒரு பிள்ளையைப் பெற்ற பின்பு வரும் அலாதிப் பிரியமும் வாழ்வின் மீதான பிடிப்பும் ஆச்சரியப்படத் தக்கது. இது பெண்மைக்குக் கிடைத்த வரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. குழந்தை வயிற்றில் உருவாகும் போதே அதன் எதிர்காலம் குறித்து உள் மனதில் வரைபடம் அமைப்பவள் பெண். ஆண்கள் வெளிப்படையாக சொல்லிக் கொண்டாலும் பெண்கள் அப்படி இல்லாமல் மனதில் கனவு சுமந்து கருவில் சிலை செதுக்கும் அதிசயச் சிற்பி பெண்.          புதிதாகத் திருமணமாகி முதற் குழந்தை கருவாகும் போது பெண்ணின் உடல்நிலையில் சடுதியான மாற்றங்களை உணர முடிகிறது. இதுவரை சாதுவாக இருந்த பெண் முரண்பட ஆரம்பிப்பாள். திருமணத்தின் முன்னர் விரும்பி உண்ணாத உணவுகளை விரும்பி உண்ணுவாள். ஒருவிதமான பிடிவாதம் நிலைத்திருக்கும். தன்னை மட்டுமே கணவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும்.  இந்த மாற்றங்களுக்கு காரணம் புதிதாக அவளுடலுக்குள் உற்பத்தியாகும் ஹார்மோன்கள் என மருத்துவ உலகமும் உறுதி செய்கிறது.         எனது முதற்குழந்தை வயிற்றில் உருவாகிய போது

நீயும் என் வாழ்வில் பொக்குளங்களையே பரிசளித்தாய்..... 💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

Image
எனக்குத் தெரியும்... நெருப்புச் சுட்டால் வலிக்கும். சுட்ட இடத்தில் பொக்குளம் வரும். ஒருக்கால் வலி உயிரைத் திருகும். பொக்குளம் வீங்கும் வெடிக்கும். வெடித்து வடியும் பொக்குள நீர் உருகி எரிவு தரும். காற்றுப் பட்டாலும் எரியும். காற்றுப் படாவிடினும் எரியும். சிறிது காலத்தில் பொசுங்கிய இடம் தடயமாய் படர்ந்திருக்கும். நோவிருக்காது. நொந்த நினைவிருக்கும். துடித்த துடிப்பின் கனதியிருக்கும். அடிக்கடி வடு கண்ணில் படும். வதைப்புக்களும் நெருப்பை விட கொடியவை தானே..... பூக்களின் பிரசவ வலி மனிதர்க்கு கேட்பதில்லை. அது அண்டசராசரத்தையே அதிர வைக்கும் மிகை ஒலி. என் இதயம் பூமிக்கடியில் புதைந்து பாதாளச் சதுக்கத்தில் வெடித்துப் பிளப்பது உனக்குக் கேட்காது. ஒவ்வொரு கதவுகளையும் நீ மூடும் போதும் நினைக்கவில்லையே உன்னைத் தேடி தேடி வந்திருக்கிறேன் என்பதை. நான் முடியுமான வரை தட்டிய சத்தத்தை செவிமடுக்கலையே..... உனக்கும் எனக்குமான இடைவெளியை நீ பணத்தைக் கொண்டு அளவிட்டாயா? பணம் என்னிடமும் போதியளவு உள்ளது. எனக்கு ஒரே ஒரு கவலை தான் நீ அடிக்க விரட்ட உன்னைத் தேடி வளர்ப்பு நாயைப் போல சுற்ற

காற்றோடு சலசலத்த புதிய கதை. 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
நீரோடும் வீதியிலே நாரறுத்து வேரழ தறித்தமரம் கிளையிழந்து இலையிழந்து கிளை சூழ்ந்த உயிரினமிழந்து விம்மிப் புடைத்து விஞ்சியழுத வலி தெறித்து வேரோடு பிளவுண்டு வெறித்தனமாய் முளைத்ததொரு முளை. முளையிலே இலை துளிர்க்க சடைசடைத்து பரந்ததங்கு கிளை. வேரின் வெப்பம் குளுகுளுத்த குளிர் கண்டு கும்மி பாடியது  நதி நீர். மீண்டும் கிளைகண்டு கிளர்ந்து வந்த பறவையினம் பாடலும் தழுவலுமாய் பற்றிப்படர்ந்து  பறந்து கிலுகிலுத்தன. சில்வண்டு சுருதி மீட்ட பொன் வண்டு தலையாட்ட குயில் ராகம் குவித்து நல்ல விருந்தாடல் மீண்டுமங்கு அரங்காடியது. வேரறுத்த கூட்டமும் வந்து நின்று வெக்கை தீர இளைப்பாறியது. வாழ்க்கை வாழவும் வாழ வைக்கவுமே என்ற ஒரு செய்தி இலைதழும் காற்றோடு சலசலத்தது. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தடம்

Image
உருகும் மெழுகாய்  அன்பு. உருக்கும் தீயாய்  கோபம். உருக்கிய தீ தீய்ந்திடும். உருகிய தடங்கள் பதிவாக. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தெளிவு

"உயிர்களிடத்தில் அன்பாயிரு". கருக் கொண்ட கருத்தைப் பரிசோதித்தேன். கருச்சிதைவாய் போனது. தாய்க் கடவுளர் விடையிலே ஊர்கோலம். தனையனோ மயிலேறி.  சிறு பிராணி எலியோ பருமனில் நசியுது. ஊர்ந்தோடும் பாம்பு காட்சிப் பொருளாய் கழுத்தில். பாம்பை படுக்கையாக்கி தம்பதிகளின் கொண்டாட்டம். பூக்களின் படைப்பு பெண்கள் அரியாசனம். ஆணுக்குப் பிறந்த பிள்ளை புலியேறி சவாரி. அடுக்கி அடுக்கி பார்க்க மலராத போதனைகளோ என நொந்து தான் போனேன். உதித்தது ஒரு  தெளிவு. இந்தக் கெடுதிகளை செய்யலாகாதென. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

பொட்டு.

Image
வெள்ளைத் துகிலுடுத்த விழிகளுக்குக் கூட அழகிய கறுத்தமணிப் பொட்டு. விழிகளும் உற்றுநோக்கா வெற்றிடம்..... விதவைகளின் நெற்றி. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இரவும் பகலாகும் வரம் வேண்டுமே. ☀ ☀ ☀

Image
     ☀ இரவும் பகலாகும் வரம் கிடைத்தால் கவலைக் கிடங்குகள் கழிப்பிடங்களாகி விடும். ஓய்வுப் பொழுதெல்லாம் உராய்வாய் தணல் மூட்டும் உடைந்த நினைவுகள். உடைந்தே போய்விடும். கற்கள் முட்கள் கிழித்து வரும் கதறல் கண்ணீர் ஓய்வது போல் சொற்கள் தீட்டி அறுத்த வலி சொந்தமின்றித் தொலைந்து விடும். அனிச்சம் மலர் தான் மனமானால் அதிர்வைத் தாங்குமோ அதனியல்பு? ஓய்வில்லாப் பொழுதாயின் வலியின் சுமையும் சுகமாகுமே. நிரந்தர ஓய்வு வரும் வரைக்கும் இரவும் பகலாகும் வரம் வேண்டுமே. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

தரம்

Image
          🌷      💦     🌷 சூரியன் சுட்டுவிடுமென்று தாமரை தன் மலர்ச்சி குறைப்பதில்லை. தாமரையை  தரம் தாழ்த்த நீர்நிலை தன் மட்டம் தாழ்வதில்லை. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

கன்னமிட்ட காதல் ❤❤❤❤❤❤❤

Image
ஆங்காங்கே மேகத்திரை ஆடையால் மறைத்தொருகால்  மறைக்காது இன்னொருகால் கவர்ந்திழுக்கும் வான் மதியை கன்னக்கோலிட்டு ... சாளர வழியாக்கி.... கண்கள் பருகுவதில் சுவையுண்டு. நிலவும் விழியும் சந்திக்கும் நித்திய காதல் அசைவில் மலரும் குழந்தைகள் தானோ..?? இருளை அழகூட்டும் விண்மீன்கள்? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

இயற்கை வழிகாட்டி 🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
தாவரத்தின் செழிப்பு கண்ணுக்குக் குளிர்ச்சி. நீரோடும் மண்ணோடும் போராடும் செழிப்பூட்டும் வேர்களின் தியாகம் பறைமுழக்கம் ஆவதில்லை. ஒளியோடு காற்றோடு  புணர்ந்து புன்னகைத்து இலைகளும் போராடும் விளம்பரம் இன்றி(க்) கனிகொடுக்கும். போராட்டமில்லாத வாழ்வு பிணமான வாழ்வே. நிறைகுடப் போராட்டத்தின் நல்ல குறிகாட்டிகள் தாவரங்கள். தற்போசணிகள் எப்போதும் இரந்துண்டு  வாழ்வதில்லை. தன்நிழலைச் சேர்ந்தோரை தவிக்கவும் விடுவதில்லை. தந்திரமாக கொடுத்துக் கொடுத்தே இனத்தைப் பெருக்கும். நேரந்தவறாத வேலை... ஓய்வில்லை. ஓய்வதுமில்லை. மௌனத்தில் மறுமலர்ச்சி...... போராடும் பொறுமை காக்கும். முக்கி முழங்காத போராட்டம்.... கண்ணைக் கவரும் செழிப்பு.... இடத்தின் குறிகாட்டும் பண்பு.... ஆர்ப்பாட்டமில்லை.... அணிவகுப்பில்லை.......ஆனாலும் நிலைத்திருப்பில் சிறப்பு........ நிழலோடு குளிரூட்டி அழகோடு பூத்துக் காய்த்து இலையோடு பூவும் தண்டும் வேரோடு பட்டை என தன்னில் நிறைந்ததை தானமாக்கும் தாவரங்களிடம் கற்றிட நிறைய உண்டு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija 4:12 pm

இதய முற்றத்தில்..... ❤💚❤💚❤💚❤💚❤ 🐤🐦🐤🐦🐤🐦🐤🐦🐤🐦

Image
"அன்பைத் தருகிறேன். ஆயுள்வரை எடுத்துக்கொள்." என்ற உன் திருவாயால்..... இப்போ.... "அதுக்கு வேற ஆள பாரு" என்கிறாய். உண்ட மிட்டாயை உடனே தா என்று சிறு பிள்ளை போல அடம் பிடிக்கிறாய். சிரிப்பு வருது உன் செய்கை கண்டு. "அன்பைத் தருகிறேன் ஆயுள் வரை எடுத்துக்கொள் " இவை எனக்காக உன் இதயம் சிலிர்த்த சிலிர்ப்பு. இதயத்தில் எழுந்த வாக்கொளி. அந்தக் குளிர்ச்சுவையை அந்த ஒளிவடிவை நானிழக்கத் தயாரில்லை. ஆயுள் முடிந்த பின்னும் உன் அன்பில் நனையும் அழகிய வரமது. "விதைத்தவை தான் அறுவடையாகும்" என்கிறாய். குஞ்சு பொரிக்கவும் கதகதப்பான அடைகாப்புத் தேவை. என் அன்பு முட்டைகளை உன் கோபத்தின் கதகதப்பில் அடைகாத்துக் கொள். அவை அழகான குஞ்சுகளை நிறைவாகப் பொரித்து இதயத்து முற்றத்தை நிறைத்து மென் மொழியால் அழகூட்டட்டும். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
மாய்மாலம் காட்டும் கள்ள நெஞ்சர்கள். செத்துத் தொலையட்டும். 🌷🌷🌷🌷🌷🌷🍀🍀🍀🍀 மீண்டும் போர் வேண்டாம். காணாமல் போனோர் வேண்டாம். கல்லறைகள் வேண்டாம். தாயிழந்த பிள்ளைகளின் தவிப்பு வேண்டாம். நிந்தம் நித்தம் அழும் துயரம் வேண்டாம். அங்கமிழந்த அவலநிலை வேண்டாம். நட்பை இழந்த சோகம் வேண்டாம். குருதி பாயும் தேசம் வேண்டாம். அவலம் சுமந்த காலத்தில் விடுப்புப் பார்த்த வீணர் வேண்டாம். சொகுசாய் இருந்த அயோக்கியர்கள் துன்புற்றோரை செம்மறியாய் மேய்க்க வரும் இழிநிலை வேண்டாம். துன்புற்றோர் கண்ணீரைக் காட்சிப் பொருளாக்கும் அரசியல் கயவர்கள் வேண்டாம். தூண்டி விட்டுக் குளிர்காயும் துட்டர்களும் வேண்டாம். ஓடி ஒழிந்து வீரம் பேசும் ஓநாய்களும் வேண்டாம். தமிழ் இனத்துக்குள்ளேயே பல உயர்வு தாழ்வுப்  பேதமைகள் ஒரு கொள்கையில்லாத பல ரட்சகர்கள் ராட்சதராய்..... ஒரு கதிரை ஏற பலரை வசைபாடும் தமிழ்த் தலைமை தீ வாய்கள். ஒற்றுமை ஒற்றுமை என ஓதுவாரிடையே ஒற்றுமையில்லையே அவரேன் நமக்கு? கும்பி(வயிறு) கொதிக்க குண்டுகள் உயிர் குடிக்க உயிர்களை இழந்து உறவிடம் தொலைத்து நொந்து நொந்து நடந்த வரலாற்றை வந்துதித

எஞ்சிய காலம்..... 💓💓💓💓💓💓💓

Image
சிறகு விரித்து அருவி குளித்து உயரப் பறந்திட வா.! - இந்த வான வெளியை பறந்து அளந்து பலதும் அறிந்திட வா.! -வண்ண கலவை குளித்த நிலவில் ஒருநாள் கதைகள் பேசிட வா.!- மனம் மயங்கிமயங்கி நிலவில் உறங்கும் வரங்கள் பெற்றிட வா.! வாழ்வின் எஞ்சிய காலம் வாரிக் கொடுப்பதில் கைகள் சிவந்திட வா.! -அந்த சிவந்த கரத்தின் திடலில் மலரும் மலர்கள் இரசித்திட வா.! செக்கச் சிவந்த கதிரவன் ஒளியை கண்ணில் ஏந்திட வா.! இந்த உலகில் தீய ச(ங்)கதி அழிக்கும் விழிகள் சுமந்திட வா.! - நல்ல தாயின் கருவில் மலர்ந்த திருவென மனங்கள் போற்றிட வா.! -இதய சிலிர்ப்பில் சிலிர்த்து உயிர்ப்பில் நனையும் அன்பில் குளித்திட வா.! வாழ்வின் எஞ்சிய காலம் நெருடும் அலைகளை நெம்பித் தள்ளிட வா.! -நல்ல கனவு பலிக்கும் காலம் சிறக்கும் கரங்கள் கோர்த்திட வா.! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

தோற்றுப் போன நீதியாகுமோ ???? 🐚🐚🐚🐚🐚🐚🐚🐚

நீதித்தாயே! நீயும் ஒரு தாய் தானே. ? குற்றஞ்சாட்டப் பட்டவர் குற்றங் களைய முடியாத கண்கட்டிய வித்தைக்காரி  நீ. காலக் கடத்தலில் கடந்தேகும் இளமைக் கனவைப் புதைத்திட்டாய். தாயும் சேயும் இணையும் கோல வாழ்வு தன்னைக் குலைத்திட்டாய். நடையாய் நடக்கும் முதுமைத் தாயின் நரையில் வலியை விதைத்திட்டாய். பெற்றவள்  மகவைக் கொன்றிடச் சொல்லும் கொடிய வதைப்பை கொடுத்திட்டாய். வசந்தகால வாழ்வைப் பறித்து வடுவை உன்னில் பதித்திட்டாய். விடியல் காணா விழியைத் தாங்கி விழியுள்ளோர் வழியை சிதைத்திட்டாய். இருபத்தேழாண்டாய் ஒரு குற்றங்களைய முடியாத உன் தராசு பிடித்த கரங்களிலே இன்னும் வலி ஏறலையே.... சாதனை படைத்தாய் வாழியவே...! உரத்துக் கத்தும் நீதிக்குரல்கள் ஒலி புகா  மரத்த காது பெற்றாய் வாழியவே..! தமிழக நீதித் தாயே! இதோ!   உனக்கொரு சந்தர்ப்பம். உன்னோடு பேசவே வரம்தந்தது  உச்ச நீதி மன்றம். சரிவர அணிந்து நீதிநிலை நாட்டு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

நேருக்கு நேர் மோத வருவீர். 🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀

Image
திறனோடு போராடும் வலிதில்லாக் கோழைகளே! நீவீர் பலபேர் முயங்கி உதித்த படையலின் வடிவங்கள் தான். வந்த வழியும் சரியில்லை வளர்ப்புச் சரியில்லை. வெந்து சாகுங்கள் உமையீன்றோரை தரந்தாழ்த்த வைத்த செயலாலே நொந்து சாவுங்கள். நெஞ்சில் உரமில்லாக் கோழைகளே ! ஒரு தகப்பன் உயிரூட்ட ஒரு தாயின் அமுதத்தை ஏழு வயது வரை பருகியவளின் முகத்தோடு மோதிட வருவீர். திறனோடு மோத வலிதில்லாக் கோழைகளே ! திடமிருந்தால் மறைந்தோடாது நேருக்கு நேர் மோத வருவீர் . வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

வழிகாட்டிகளை வாழ்த்தும் நாள்....

Image
விழிகளில் ஒளிரும் ஒரு வித நளின பார்வையின் கோர்வையில் கோபமும் சாந்தமும் கேட்டியாய் குறிகாட்டும். ஆழ்துளைக் கிணறு போல் அகத்திலே மறைந்திட்ட ஊற்றினைப் பெருக்க நின் அறிவுக் கருவிகள் திடமூட்டும். நேரிய வழியை காட்டவும் வாழ்ந்து காட்டவும் உமது வாழ்நாளின் சுகதுக்கம் மறைத்தொளிர்வீர். தியாகத்தின் வேர்களை கருவெனச் சுமந்திடுவீர். குற்றமறுப்பதில் மெல்லின கூராயுதம் தாங்கிடுவீர். கற்பிக்காமலே உம் செயலால் மனப் பொற்கோவிலில் மானசீகக் குருவாயும் மறை பொருளாய் எழுந்தருள்வீர். ஞானம் சுற்றுவதும் சுழல்வதும் குருவின் ஈர்ப்பு விசைப்படியென வாழ்வின் எல்லை வரை இயம்பும் வளமூட்டிய நல் மாணாக்கர் விதியுரை. காடும்பாடும் கருத்துடனே ஆடும் அசையும் பொருளெல்லாம் நீக்கமற நிறைந்த அறிவொளியாய் நீண்டொளிரும் புகழ் கதிரொளியாய். வானிடையே வெள்ளைத் திரள் மேக அலையோடு அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் ஒளிர்கின்ற முழுமதியாய் நெடுவானில் பவனி வரும் உமது புகழ். வாழ்க ஆசான்களின் அரும்பணி. பெரும்பணி பிள்ளையை தாமீன்ற சேயாய் நினைந்துருகி கையணைத்து கை காட்டி வழிப்படுத்தும் அதிசய வரப்பணி. பரந்திர
கடிதம் ------------- எழுதுகோலுக்கும் கடதாசிக்கும் அழகூட்டிய முத்தம் கடிதம். பத்திரமாய் இதயத்தோடு அடிக்கடி மெய்யுருகி அணைத்த பொக்கிஷம் கடிதம். இதயங்களின் இனிய எண்ணத்தைச் சுமந்த காலைநேர பூபாள ராகம் திருமுகம்( கடிதம்) அன்பின் திருமுக தரிசனத்தை படியெடுத்தனுப்பிய தூதறிக்கை கடிதம். காகிதமும் அன்புடையார் கன்னங்களாகி கலந்துருகிய கழிமுகத்திடல்  கடிதம். கிறுக்கல்கள் எல்லாம் சொல்லோவியமாய் தரிசனம் தந்த அழகிய அழைப்புமணி  கடிதம். இன்றும் காகிதமுண்டு எழுது கோல்களுமுண்டு காலப்பெருவெளி அரித்த கண்காட்சிப் படிமமாய் கடிதம். உணர்வுகளைச் சேகரித்த ஊற்றறிக்கை தூர்ந்ததுவோ ? தொலைந்த மனிதத்தை மலர மலர்வாய் திருமுகமே..! வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija