Posts

Showing posts from 2019

மழலையாகி......

Image
நியாயங்கள் பூக்கும் தடாகத்தில் நல்ல விளைவுகளை விருந்தாக்கும் தடாகத்தில் கரையோரம் அமர்ந்து காற்றுவாங்கி மூச்சை முற்றிலும் புதிதாக்க ஆசை ஆசை. சேற்றில் முகிழ்ந்தாடும் செந்தாமரை அல்லி புல்லி பூத்து குலுங்குவதும் புத்தெளிலுடன் மனத்தேரிலே ஊர்வலம் ஏறுவதும் இயற்கையின் பேரமுதென உணர்ந்து நெஞ்சம் பூரித்து புன்னகைக்க அடிமனதில் ஆசை. வண்ணக்கலவையிட்டு வடிவூட்டும் கலையேற்றி புளுக்களை புதுமையாக்கி ரசிக்க வைக்கும் இயற்கைக்கு இதயம் பேரழகு. அந்தப் பேரழகில் இதயத்தை பொருத்தி பேரழகாக்கி நல்ல புதுப்பிறவி கொண்டாட ஆசை. பூவரசும் பப்பா தண்டும் கொண்டு புதுவிதமாய் நாதசுரம் மீட்டி புதுக்காற்றை புது உலகை சின்னத்தளிர்களிற்கு பரிசளிக்க ஆசை. நாணலோடும் கோரை காரை சூரையோடும் உறவாடி பூமித்தாயை மீண்டும் நல்ல அழகியாக்கி ஆராதிக்க ஆசை. தும்பியோடும் தம்பளாம் பூச்சயோடும் இன்பக்கதை பேசி இன்னும் நல்ல பொன்வண்டையும் பொலிந்த நல்ல தேனருந்தும் சின்னக்குருவிகளையும் அரவணைத்து வீட்டுமுற்றம் நிறைந்த வண்ணக்கலவை தெளித்த கோலமாய் அழகூட்டும் பூக்களையும் தென்னங்குரும்பைகளையும் கொண்டு நல்லதொரு தேரும் கட்டி இன

புதுப்புது அர்த்தங்கள்.

Image
ஒரு புது மலர் பூப்பது போல ஒரு குழந்தையின் வரவு போல அனைத்துமே அழகாய்த்தான் ஆரம்பிக்கின்றன. பூக்களின் வாசனை போல குழந்தையின் ஸ்பரிசம் போல வருடும் இன்பக்கலவை எப்போதும் அழகாகிறது. தரிசித்த மலர்தல் தரிசித்த உணர்வுகள் நினைவுகளில் சலசலக்கும் நீரோடைகளாக குளிர்த்தி செய்யும் புதுப்புது அர்த்தங்கள். செவிப்பறையை நனைத்து நுழைந்த இனிய சொற்கலலை  இதயத்தில்குளிர்களி போல  ஜில் என்று நனி குளிர் தருபவை. நல்ல தொடக்கங்களுக்கு மலர்தலும் பிறத்தலுமே தொடர் பந்தம். நல்ல தொடக்கங்களை இளந்தென்றல் கூட ஆயுளை நகர்த்தாது அலங்கரிக்கும். நல்ல தொடக்கங்கள் நித்தம் நித்தம் பிறக்கும் கலையை கருத்தோடு கற்பிக்கும் நல் ஆசிரியர்கள். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
(11) கடைகளில் தொங்கியது / விலைக் குறிப்பு பட்டியல்/ கடவுளர் சிலைகளுக்கும். (12)  மழை பொழிந்தது / குடை பிடித்தன காளான்கள்/ ஏழைகளுக்கு விருந்து (13) மயில்களின் இறகினில் /  கண்களின் அபிநயம் / காட்டினாள் சிறுமி (14) புகையிரதத் தண்டவாளம் /இணைந்திடத் துடித்தது/ காதலில் மனது. (15) பழய புத்தகம் / செல்லரித்துக் கிடந்தது/ செருக்கள பூமி. (16) மின்மினிப்பூச்சிகள் /மினு மினுத்து ஒளிர்ந்தன/ தெரு விளக்கு கம்பங்களில்

💚வன்னிமகள் தரும் ஹைக்கூ💚

Image
(1) விசிறிகள் சுழல்வதற்கு //காற்று தேவை// சுவாசம் சீர்மை பெற. (2) கண்களுக்கு அவசியம் // கறுப்பு மணிகள்// குழந்தைகளின் காப்பாக. (3) நிலவு பிரகாசிக்கிறது. // சூரிய ஒளித் தெறிப்பு // பச்சயத்தின் மறுமலர்ச்சி. (4) கடும் வெயில் கொதிப்பு. //வியர்வைத்துளிகள் பெருக்கம்// வேலை மனிதர் சுறுசுறுப்பில். (5) கைவிடப்பட்டு சுவர்கள் //பாழடைந்து கிடக்கிறது// விதவையின் நெற்றி. (6) மழலையின் பிடிவாதம் // அழுகுரல் கேட்கிறது // கல்லறைப்பாடல்களில். (7) நுளம்புகள் பெருக்கம் // வலைகள் ஆயத்தம்// வீச்சு மீன் பிடிப்பதற்கு. (8)   காகிதங்கள் படபடக்கின்றன // வெள்ளைத் தாள்களாக// மலர்கிறது தாமரைப்பூ (9) துவிச்சக்கரவண்டி //துள்ளிப்பாய்கிறது// முயல்கள் வெருட்சியுடன். (10)   இரவு மழை- மரங்கள்     //கரும் பூதங்களாய்// மேகங்கள் அணிவகுப்பு. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
மூட(ரின்) நம்பிக்கை. குழந்தையின் கழுத்துப்பகுதியில் காணப்பட்ட நீர்த்தழும்பை கண்டு பதறிப்போனாள் துர்க்கா. " அக்கி" என்று புகுந்த வீட்டில் இருந்த வயோதிபர்களும் அயல்வீட்டு வயோதிபங்களும் கூடிக்கதைத்து  "ஏதோ அம்மன் கோபம் கொண்டிட்டா"  எனப்பேசிக்கொண்டனர்.              குழந்தைக்கு உடம்பும் கொதிக்கத்தொடங்கியிருந்தது நிலமை எப்பிடி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் வலியும் வேதனையோடும் தாயை விட்டு இறங்காமல் குழந்தை ஒட்டிக்கொண்டதால் வீட்டு வேலைகளை செய்வதற்கு துர்க்காவால் முடியவில்லை. "அழுதாலும் அவளே தான் பிள்ளை பெறவேணும் " என்பதற்கிணங்க பரபரப்பாக வீட்டு வேலைகளை  ஓரளவு முடித்துக்கொண்டு  யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பேருந்தைப்பிடித்து எட்டு மணிக்கிடைல போவதே அவளுடைய எண்ணமாக இருந்தது. மணியோ விரைந்தோடி ஏழரை காட்டியது. புறப்பட்டு விட்டாள். வீட்டைப்பூட்டி வெளியேறியவளிடம் " பரியாரியாரிட வீடு தெரியுமோ? " என புகுந்தவீட்டு வயோதிபமாது வினவினாள். " எதுக்கு பரியாரிட வீடு? நான் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு போறேன்"  எனக்கூறி புறப்பட வெளிக்கிட்டவள