Posts

Showing posts from November, 2018

கஜா புயல்.

Image
ஆண்டின் தொடக்கப்பகுதியில் இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதிகளில் கடும்வரட்சி நிலவியது. இலங்கையின் பகுதிகள் மட்டுமன்றி தென்னாசியவலய நாடுகள் பலதும் வரட்சியை எதிர்கொண்டன. உயர்வரட்சி நிலவும் பகுதிகளில் உயர் வெப்பநிலை ஏற்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.இந்த உயரிய வெப்பநிலை காரணமாக உலகின் எதிர்பார்க்கப்படாத பல இடங்களில் தாழமுக்கமையங்கள் உருவாகி அவை சூறாவளி எனப்படும் புயலைத்தோற்றுவிக்கின்றன.     சூறாவளியால் உலகின் பலபகுதிகள் தொடர்ச்சியாகப்பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேற்கிந்தியத்தீவுகளிலுள்ள கரீபியன் தீவுகள்; தென்சீனக்கடற்பகுதி ;ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குப்பகுதி; பிலிப்பைன்ஸ்; யப்பான் ; தென்னாசிய நாடுகள் என புயலால் பாதிப்படையும் நாடுகள் ஏராளம்.        புவியின் சரிவுத்தன்மையாலேயே பல்வேறு காரண காரியங்களோடு இந்தப்புயல் தோற்றம் பெறுகிறது. அதாவது பூமி 23.5 பாகை சரிவு கொண்டு சுழல்வதன் காரணத்தால் பூமியின் ஒருபகுதி சூரிய ஒளியைப்பெறும்போது மறுபகுதி இருளடைகிறது. சூரியஒளிபடும் பகுதி வரட்சி அதிகரிப்பால் விரிவடைந்து மேலேழுகிறது. இதனால் அந்த இடத்தில் வெற்றிடம் ஒன்று உருவாகிறது. அதேவேளை இருள் கொண்ட