Posts

Showing posts from August, 2018

சுகம் நிறைந்தவள்.......

Image
வானமகள் ஜாலம் காட்டிக் குதூகலிக்கும் ஒரு இளமாலைப்பொழுது. மெல்லிய கீறலாய் இளம்பிறை சிவந்து சிரித்துக் கொண்டிருந்தது. கடற்கரைக்காற்று இதமாகத் தேகத்தில் புரண்டு மனதைச் சீண்டிக்கொண்டிருந்தது. நினைவுகளும் இனிமையாகி..... விநாடிகள் துரிதகதியில் பறந்து நிமிடங்களைத் தொட்டுவிடும் துடிப்பில் இயங்கிக்கொண்டிருக்க, நானும் அவளது நினைவுகளை மீட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அவளைப் பார்த்து இன்றுடன் மூன்று நாட்களாகி விட்டன. இன்னும் சில தினங்களில் அவளை மீண்டும் பார்க்க முடியும். அவளைப் பிரிவதென்பது ஏக்கமான வாழ்க்கையே.           சொல்லும்படியாக அவள் பேரழகியல்ல. ஆனாலும் பார்த்தவர் மயங்கும் அழகு விழிகள். சுட்டியிழுக்கும் வசியப் பார்வை. அப்பப்பா....அந்தக் கண்களுக்குத்தான் எவ்வளவு சக்தியடா!  கறுப்போ சிகப்போ மா நிறமோ என்று கூறமுடியாத ஒருவித அழகு. அலையலையாக முன் நெற்றியைத் தொட்டாடும் சுருண்ட கூந்தல். அழகான சிணுங்கல் சிரிப்பு. பார்த்தவர்கள் வியக்கும் உடல்வாகு. இத்தனைக்கும் சொந்தக்காரி சுகநிதா.    **** இயந்திரமாய் சுழன்று அலுவலகக் கதிரைக்கு விடை கொடுத்து, பேருந்தில் புதைந்து, அலுத்துக் களைத்து வீடு போய் அவளத

புதுப்பிப்போம். 🌟🌟🌟🌟

Image
உள்ளக் காதலோடு   உள்ளத்தால் உன் தோளில் சாய்கிறேன். சிலிர்க்கும் சிறகுகளை தளர்த்தி வாரிக் கொள்கிறாய். உலகத்துப் பூக்களெல்லாம் திரண்டு உச்சிவழியேகி இதமூட்டும் இன்பக்கிளர்ச்சியாய்  தேகம். உன் விழிப்பார்வைக்குள் என்னை விழுங்கிக் கொள்கிறாய். கண்களும் காந்தமாகப் பற்றும் காந்தக்கலை தான் காதலா? தேகத்தையும் தேனாக மெழுகாக கரைந்துருக்கும் உணர்வு தான் காதலா? குரலிலே குதூகலத்தையும் மௌனத்திலே தவிப்பையும் நெஞ்சுக்கூட்டுப் பறவை அனுபவிக்கும் இருநிலையா காதல் ? காதல் எந்த வகையாய் இருந்தாலென்ன? நீ மட்டும் என்னிரு விழிகளால் என்னை விழுங்கிக் கொள்ளும் அந்த அடர்த்தி குறைந்த உள்ளத்தால் இன்பக் காற்றில் இணைந்து பறப்போம். வா... என் காதலின் பேரின்பமே.... உலகையும் அண்டசராசரத்தையும் நொடிக்கு நொடி காதலால் புதுப்பிப்போம். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

உணர்வாய்....உணர்வாய்...... 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙

Image
நிலவோடு நீ பேசும் ஓர் நாளில் நானங்கு இருப்பதாய் நீயுணர்வாய்.... அன்றுன் மனம் பேசும் மடை திறந்த வெள்ளமென கரைந்தோடும் நீர்த்துளிகள் கண்மீது வெப்பூட்டும் நெஞ்சமும் பதைபதைக்கும். போர் தின்ற காயங்களை பொறுத்துலகில் வாழ்ந்ததையும் பெருமையாய் நீ நினைப்பாய். கடந்த பெரும் காலத்தை தனிமரமாய் தாங்கியதை நினைந்து நினைந்து நெக்குருவாய்.. வாழ முடியாத வாழ்வொன்றை இலாவகமாய் கடந்ததையும் உவகையுடன் மனங்கொள்ளுவாய்... சிரித்தபடி இறந்திருந்த என்முகமும் உன் நினைவில் அடிக்கடி வந்து மறையும். நிரந்தரமில்லாத வாழ்வினை கடந்தோடும் கடிகாரம் கடிந்திடாமல் கூறி நகரும்.-இனி யாரையுமே வெறுத்திடாமல் நடைபோட வேணுமென என் வாழ்வு உனக்குரைக்கும். நிலவோடு நீ பேசும் ஓர் நாளில் நானங்கு இருப்பதாய் நீயுணர்வாய்.... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மீண்டும் சுட்டி விளக்கில்.... ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

Image
என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய்? உன் திடீர் வருகையால் குதுகலித்து படபடக்குது காற்று.... சட்டெனக் கொட்டிய நீர்க்கோர்வைக்குள் புகுந்து ஆடைகளைச் சேகரிப்போர் அவலத்தை ரசிக்கிறாய்.... சட்டப்படி வா என்றுனக்கு கட்டளையிட நாம் யார்? தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் உன் இயல்பில் ஏனிந்த மாற்றம்? தேக்கி வைத்த அன்பை எல்லாம் கொட்டிப் பொழிந்து தீர்க்கிறாய். இதமாக ஒரு காற்றை தேகத்திலே பூசுறாய்.... மகிழும் ஒரு புன்னகையை மின்னலென தீட்டுறாய்... மனதில் உள்ள காதலை நீ முழங்கி முழங்கிப் பாடுறாய்... இரவை அணைக்க ஒளிகளை நீ தடைகள் செய்து பூட்டுறாய்... மீண்டும் அந்த சுட்டி விளக்கை ஏற்ற வைத்தே சிலிர்க்கிறாய். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

விறைத்துப் போன இதயத்திலே.... ❤❤❤💔💔💔💔💔❤❤

Image
மரத்துப் போன இடமாக முட்கள் புதைந்த இதயம். நீயும் சில முட்களையே வீசிச் செல்கிறாய்.... இன்னும் இந்த இதயம் தாங்குதிறன் கொண்டதோ என பரிசீலிக்கிறாயா? விறைத்துப் போன இதயத்திலும் இரத்தம் தானுள்ளது. உன் பரிசீலனை முடிவதெப்போ? வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

நதி நிலை நியதி. வாழ்விற்கு பெறுதி. 💦💦💦💦💦💦

Image
உச்சி விழுந்த நதிகள் உருண்டோடலே இயல்பு. கீழே...கீழே...கீழே....என்று பணிந்தோடலே நியதி. நதிகள் ஓடும் இடங்களெங்கும் விதந்தாடிடும் பசுமை. கரையைத் தழுவி நுரையைச் சிதறி மகிழ்ந்தாடுமே விரைவில். பள்ளம் தேடிப் பாய்ந்தோடிடும் உள்ளம் கொண்டது நதிநீர். ஓடும் நதிகள் கூவமானால் நாறிப்போகுமே நிலநீர். குடத்தில் குளத்தில் ஏந்திய பின்னும் குடைந்தோடுமே கடலை. நதிகள் மலை மீள்  ஏறுவதில்லை. தேடினும் அது கை கூடுவதில்லை. நதிக்கு மலை நிரந்தர வாழ்விடமல்ல. போகும் இடமெலாம் பொழிவை வழங்கி புன்னகைப்பதே நதியதன்  இயல்பு. நதியாய் ஓடு ..... நதியாய் வாழ்வளி..... நிரந்தரமில்லா வாழ்வை உணர நிமிர்ந்து நோக்கு நதி நல்லுதாரணம். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

விடுதலையிரவுகள்....... 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃

Image
கடந்து போன இரவுகளைச் சபிக்கிறேன். தொலைந்து போகட்டும் அந்த சுமை ஏறிய இரவுகள். சுவருக்குள் நசுங்கிய இரவுகளின் கண்ணீருக்கு விடுதலை. ஆகா....!!! இரவின் வெட்டை வெளியில் பட்டுத் தழுவும் காற்றை இப்போதெல்லாம் மனம் ரசிக்கிறதே....! இருளோடு இருளாக பறக்கும் பட்சிகளுக்குத் தான் எத்தனை கனவுகள்.... அசைந்தாடும் தலைபெருத்த மரங்கள்... நாசியை நனைக்கும் இரவுப்பூக்களின் வாசனை.......எல்லாமே தனிமையிலும் அழகாயுள்ளது. அடைக்கப்பட்ட சுவருக்குள் கிடைத்த மகிழ்ச்சி என்ற அவலத்தைவிட. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹

Image
புதுப் பாதை தந்தாய். காலப் பெருவெளியில் நகைக்காத இடமும் தந்தாய். இருவிழியூடு அகவிழியை அகலத் திறக்க பாசக்கயிறானாய். வீசி ஒருவகை நேச விதையை நெஞ்சத்தில் விதைத்தாய். தமிழையும் தமிழ்ப் பெருமையையும் இகழாத ஏற்றம் தந்தாய்.. உயிரகத்தால் பிரியும் போதும் உன் பெயரை உச்சரிக்கும் உயர் நிலையைத் தந்தாய். கண்டிப்பிலும் பாசம் கைகோர்க்கும் என்பதை நினைந்து நினைந்து உருக வைத்தாய்.... அன்பிலே நீ ஒரு  புது ரகமென அறிய வைத்தாய். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija

மூகமூடி சிரிக்குது......... மனம் மூடி அழுகுது.

Image
தொலை தூரமிருந்தாலும் தெவிட்டாத தேனமுத குரலாலே மகிழ்வு தந்தாய்... நெருங்கி வந்த போதினிலே நெருப்பாக சுட்டெரித்தாய். முகம் பார்க்க முடியாத தொடுவானம் நீ ஆனாய்... நேரில் காணாத போதிலும் -பாரில் பெருபகை நானானேன். இன்னும் குறையாத காதலுடன் முதன்முதல் முகமூடி நானணிந்தேன். குமுறிக் கொதிக்கும் என் உள்ள எரிமலைக்குழம்பு விழிச் சிகரத்தால் விடுவிடென கன்னத்துப் பள்ளத்தாக்கால் பாய்ந்து ஆவியாகும் கோலமதை நீ காணக் கூடாதே.... முதன் முதலாய் நான் முகமூடி அணிந்து கொண்டேன். என்னை கரைக்கும் உன்மீதான காதல் உன்தன் வெறுப்பில் எரிந்தும் ஒளிர்கிறதே. யாருக்கும் தெரியாது  மனதை மறைக்க முகமூடி அணிந்தேன். -அந்த மூகமூடி சிரிக்குது...உள்ளிருக்கும் மனம் மூடி அழுகுது. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija