Posts

Showing posts from July, 2018

வெற்றி வெற்றியே....

Image
ஒவ்வொரு விடியலும் புதிய புதிய சக்தி தரட்டும். ஒவ்வொரு நிமிடமும் மனச் சிறகில் நல்ல பலத்தை தரட்டும். ஒவ்வொரு ஜீவனும் நிறைவுடனே புன்னகை சிந்தட்டுமே... ஒவ்வொரு காரியமும் இனிதாக துலங்கட்டுமே... புதிய விடியல்... புதிய கீதம்.... புதிய மலர்கள்.... புதிதாகட்டும் புதிய வாழ்வு... கடவுள் என்னோடிருக்கிறார்.... நான் மகிழ்ச்சியானவன்.... நான் வெற்றியுடையவன்..... நான் ஆற்றலுடையவன்... என்றும் வெற்றி வெற்றியே..... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija

குற்றச்சாட்டு 🌷🌷🌷

Image
இந்த தண்ணீருக்குத் தான் தாமரை மீது இத்தனை காதல்.... தாமரைக்குப் பாரமாகாது  கீழிருந்து தாமரையை தன்மடிமீது   ஏந்தி... தாமரை அழகிலும்.... தாமரை மகிழ்விலும்.... மறைந்து கரைகிறதே.... இந்தப் பார்வையாளர்களோ புனித அன்பைப் புரியாமல் ஒட்டிக் கொள்ளாத உறவென குற்றம் சாட்டுகிறார். விம்பங்களில் இன்பம் காண்பதும் அழகு தானே.. வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija.
Image
சிரிப்புத் தான் வந்ததடி... தோழி சிரிப்புத் தான் வந்ததடி. 😜😜😜😜😜😜😜😜😜😜 கல்யாண வயது வந்ததென சொல்லி மாப்பிள்ளை பார்த்தாரடி தோழி மாப்பிள்ளை பார்த்தாரடி. நாட்டு மாப்பிள்ளை நல்லதில்லை என வெளிநாடு அனுப்பினால் வீடும் விளங்குமென தீர்மானங் கொண்டாரடி. ஓடித்திரிந்ததில் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஆப்பிட்டுக் கொண்டானடி. தரகரிடம் அந்த மாப்பிள்ளை வைத்த வேண்டுதல்கள் இவைதானடி... நீண்ட முடியுடைய பெண் வேணும். மெல்லிய பெண்ணாக இருக்கோணும். சின்னப் பெண்ணாக இருக்கோணும். நான் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்ததால் பெருமை அடைந்தேனடி தோழி பெருமை அடைந்தேனடி.... சம்மந்தம் பேசிய தரகன் தந்த புகைப்படம் எனக்கும் பிடித்ததடி..... கமல் போல் அழகிய விழியுடன்... ஓர் அழகுத் திருமுகம் .... வகிர்ந்தெடுத்த தலைமுடி.... பார்க்கப் பார்க்கத் தேனூறும் பார்வையடி.... ஆவல் தான் மனமெங்கிலும்... நான் தேடித் திரவியம் தேடினும் இவன் போல் ஒரு மாப்பிள்ளை அமையாதடி.....என் கற்பனைச் சிறகுகள் காற்றில் பறந்திட கை கோர்த்து அவன் என் கையைப் பிடித்திட வெட்கமும் நாணமும் கொல்லவும் அள்ளவும் கனாக் கண்டேனடி ஆண்டாள் போல்
Image
கழுகுக்கும் பருந்துக்கும் படையலிடுங்கள். 🍂🍂🍂🍂🍂🍂🍂🍂 ஊமைக்கீதமாய் உறங்கிப் போன துயர் ஏழு மாதம் கடந்த பின்தான் பெற்ற தாய்க்கும் புலப்பட்டதோ? பாதுகாப்புக்கு காவல் பேய்களா? பார்த்திருந்து காவல் காத்தது இளையவள் உடலை ருசித்திடவோ? ஊமையின் வேண்டுதலை இறைவனும் உணரக் காலம் கடந்ததும் ஏன்? கடவுளும் செவிப்புலன் இழந்தவனா? கல்லில் செதுக்கிய கண் கொண்ட கடவுளுக்கு கண்ணில் உயிர் தேடல் அறியாமையே... கண்களைக் கட்டிக் கொண்ட காந்தாரியாய் நீதி தேவதை. துச்சாதனனைப் பெற்றவளுக்கு துகிலுரிப்பு பிழையாகுமா? குறிவிறைப்புக் குதறலில் கிழடும் அடக்கமடா.... பெற்ற தாயோடும் மகளோடும் சகோதரியோடும் இந்த எருமைகள்  எப்படி மரியாதை காட்டினவோ? நாய்ப் பிறப்புக்களுக்கு மகளென்ன தாயென்ன ? இழி பிறவிகளைப் பெற்ற தாய்மாரே! சகோதரிகளே! மனைவியரே! மகள்மாரே! நீங்கள் உத்தமப் பிறவிகள் என நிறூபிக்க ஒரு வழியுண்டு அவர் குறிகளை அறுத்து கழுகுக்கும் பருந்துக்கும் படையலிடுங்கள். மீதிக் காலம் சாகும் வரை ஆடையில்லாமல் அலையவிடுங்கள். காண்போருக்கு காறித் துப்பவும் கனதியான பாடமாகவும் அமையுமது. வன்னிமகள் எஸ்.கே.