கன்னமிட்ட காதல் ❤❤❤❤❤❤❤


ஆங்காங்கே மேகத்திரை
ஆடையால் மறைத்தொருகால் 
மறைக்காது இன்னொருகால்
கவர்ந்திழுக்கும் வான் மதியை
கன்னக்கோலிட்டு ...
சாளர வழியாக்கி....
கண்கள் பருகுவதில் சுவையுண்டு.

நிலவும் விழியும் சந்திக்கும்
நித்திய காதல் அசைவில்
மலரும் குழந்தைகள் தானோ..??
இருளை அழகூட்டும் விண்மீன்கள்?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹