ஒரு புது மலர் பூப்பது போல ஒரு குழந்தையின் வரவு போல அனைத்துமே அழகாய்த்தான் ஆரம்பிக்கின்றன. பூக்களின் வாசனை போல குழந்தையின் ஸ்பரிசம் போல வருடும் இன்பக்கலவை எப்போதும் அழகாகிறது. தரிசித்த மலர்தல் தரிசித்த உணர்வுகள் நினைவுகளில் சலசலக்கும் நீரோடைகளாக குளிர்த்தி செய்யும் புதுப்புது அர்த்தங்கள். செவிப்பறையை நனைத்து நுழைந்த இனிய சொற்கலலை இதயத்தில்குளிர்களி போல ஜில் என்று நனி குளிர் தருபவை. நல்ல தொடக்கங்களுக்கு மலர்தலும் பிறத்தலுமே தொடர் பந்தம். நல்ல தொடக்கங்களை இளந்தென்றல் கூட ஆயுளை நகர்த்தாது அலங்கரிக்கும். நல்ல தொடக்கங்கள் நித்தம் நித்தம் பிறக்கும் கலையை கருத்தோடு கற்பிக்கும் நல் ஆசிரியர்கள். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
அழுது மயங்கி, களைத்து உறங்கி , மீண்டும் குற்றுயிரும் குலையுயிருமாய் விழிகள் திறந்த போதெல்லாம் நானிருக்கிறேன் எனச் சொல்லி ஆறுதல்படுத்த எப்போதும் என் அருகில் யாரும் இருந்ததில்லை. எப்போதும் இருப்பதைப் பறிக்க நினைத்தோரின் வரிசை மட்டும் நீண்டிருந்தது. வலி தெரியாத ஒருவகை மாத்திரை போட்டு நிரந்தரமாக உறங்க வேண்டும் என ஒரு பிரமை பூத்த போதை நெஞ்சோடு போராடிக் களைத்து துவண்ட போதெல்லாம் "எங்களை என்ன செய்வதாக உத்தேசம்? " என நான்கு சின்ன விழிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. நான்கு சிறிய கரங்கள் மார்போடு இறுக்கியிருந்தன. அந்த சின்னத் தசைக்கூட்டுக்குள் இறுகிப்பிணைந்த இதயக்கடிகாரம் "கைவிட்டு விடாதே தெருவிட்டு விடாதே" என கதறிக்கெஞ்சிக்கொண்டிருந்தன. நசுங்குண்ட வாழ்வு . நாதியற்ற வாழ்வு. வலி தெரியாத உலகம் தேவை என்று தான் அடிக்கடி ஒப்பாரி பாடியது உள்ளம். ...
Comments
Post a Comment