வழிகாட்டிகளை வாழ்த்தும் நாள்....

விழிகளில் ஒளிரும்
ஒரு வித நளின
பார்வையின் கோர்வையில்
கோபமும் சாந்தமும்
கேட்டியாய் குறிகாட்டும்.

ஆழ்துளைக் கிணறு போல்
அகத்திலே மறைந்திட்ட
ஊற்றினைப் பெருக்க நின்
அறிவுக் கருவிகள் திடமூட்டும்.

நேரிய வழியை காட்டவும்
வாழ்ந்து காட்டவும் உமது
வாழ்நாளின் சுகதுக்கம்
மறைத்தொளிர்வீர்.

தியாகத்தின் வேர்களை
கருவெனச் சுமந்திடுவீர்.
குற்றமறுப்பதில் மெல்லின
கூராயுதம் தாங்கிடுவீர்.

கற்பிக்காமலே உம் செயலால்
மனப் பொற்கோவிலில்
மானசீகக் குருவாயும்
மறை பொருளாய் எழுந்தருள்வீர்.

ஞானம் சுற்றுவதும் சுழல்வதும்
குருவின் ஈர்ப்பு விசைப்படியென
வாழ்வின் எல்லை வரை இயம்பும்
வளமூட்டிய நல் மாணாக்கர் விதியுரை.

காடும்பாடும் கருத்துடனே
ஆடும் அசையும் பொருளெல்லாம்
நீக்கமற நிறைந்த அறிவொளியாய்
நீண்டொளிரும் புகழ் கதிரொளியாய்.

வானிடையே வெள்ளைத்
திரள் மேக அலையோடு
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரமாய்
ஒளிர்கின்ற முழுமதியாய்
நெடுவானில் பவனி வரும்
உமது புகழ்.

வாழ்க ஆசான்களின் அரும்பணி.
பெரும்பணி பிள்ளையை தாமீன்ற
சேயாய் நினைந்துருகி
கையணைத்து கை காட்டி
வழிப்படுத்தும் அதிசய வரப்பணி.

பரந்திருக்கும் இவ்வுலகில்
நிறைகுடமாய் விளங்கும் ஆசான்களுக்கு
ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்
நிறைமன ஒளியுடன்.

வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹