அழுது மயங்கி, களைத்து உறங்கி , மீண்டும் குற்றுயிரும் குலையுயிருமாய் விழிகள் திறந்த போதெல்லாம் நானிருக்கிறேன் எனச் சொல்லி ஆறுதல்படுத்த எப்போதும் என் அருகில் யாரும் இருந்ததில்லை. எப்போதும் இருப்பதைப் பறிக்க நினைத்தோரின் வரிசை மட்டும் நீண்டிருந்தது. வலி தெரியாத ஒருவகை மாத்திரை போட்டு நிரந்தரமாக உறங்க வேண்டும் என ஒரு பிரமை பூத்த போதை நெஞ்சோடு போராடிக் களைத்து துவண்ட போதெல்லாம் "எங்களை என்ன செய்வதாக உத்தேசம்? " என நான்கு சின்ன விழிகள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன. நான்கு சிறிய கரங்கள் மார்போடு இறுக்கியிருந்தன. அந்த சின்னத் தசைக்கூட்டுக்குள் இறுகிப்பிணைந்த இதயக்கடிகாரம் "கைவிட்டு விடாதே தெருவிட்டு விடாதே" என கதறிக்கெஞ்சிக்கொண்டிருந்தன. நசுங்குண்ட வாழ்வு . நாதியற்ற வாழ்வு. வலி தெரியாத உலகம் தேவை என்று தான் அடிக்கடி ஒப்பாரி பாடியது உள்ளம். ...
Comments
Post a Comment