இரவும் பகலாகும் வரம் வேண்டுமே. ☀ ☀ ☀
☀
இரவும் பகலாகும்
வரம் கிடைத்தால்
கவலைக் கிடங்குகள்
கழிப்பிடங்களாகி விடும்.
ஓய்வுப் பொழுதெல்லாம்
உராய்வாய் தணல் மூட்டும்
உடைந்த நினைவுகள்.
உடைந்தே போய்விடும்.
கற்கள் முட்கள் கிழித்து வரும்
கதறல் கண்ணீர் ஓய்வது போல்
சொற்கள் தீட்டி அறுத்த வலி
சொந்தமின்றித் தொலைந்து விடும்.
அனிச்சம் மலர் தான் மனமானால்
அதிர்வைத் தாங்குமோ அதனியல்பு?
ஓய்வில்லாப் பொழுதாயின்
வலியின் சுமையும் சுகமாகுமே.
நிரந்தர ஓய்வு வரும் வரைக்கும்
இரவும் பகலாகும் வரம் வேண்டுமே.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
இரவும் பகலாகும்
வரம் கிடைத்தால்
கவலைக் கிடங்குகள்
கழிப்பிடங்களாகி விடும்.
ஓய்வுப் பொழுதெல்லாம்
உராய்வாய் தணல் மூட்டும்
உடைந்த நினைவுகள்.
உடைந்தே போய்விடும்.
கற்கள் முட்கள் கிழித்து வரும்
கதறல் கண்ணீர் ஓய்வது போல்
சொற்கள் தீட்டி அறுத்த வலி
சொந்தமின்றித் தொலைந்து விடும்.
அனிச்சம் மலர் தான் மனமானால்
அதிர்வைத் தாங்குமோ அதனியல்பு?
ஓய்வில்லாப் பொழுதாயின்
வலியின் சுமையும் சுகமாகுமே.
நிரந்தர ஓய்வு வரும் வரைக்கும்
இரவும் பகலாகும் வரம் வேண்டுமே.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment