நீதியின் கண்கள் திறப்பது எப்போது?


கல்யாணத்தின் பின் 
ஆணின் பெயரை
பெண்ணின் பெயரின் முன்
தரிக்க வேண்டுமா?
கூடிப்பிரிந்த பின் கணவன்
பெயரை நீக்க வேண்டுமா?
இழப்பது இருவரின் கற்பும் தானே!
சுமப்பது சிலுவை ஒருவர் மட்டுமா?
எந்த வகையில் இது நியாயம் ஆகுமோ?
மாறத விதியா? மாற்றுவது எப்போது?

இருவரும் இணைந்து
பெண்ணின் கருப்பையில் கருவைப் போட்டு ஒரு குழந்தை சிருஷ்டிப்பார்.
தந்தை பெயரே முகவரியாவது
எந்த வகையில் நியாயம் ஆகும்?
இருவரும் இணைந்து படைத்த படைப்புக்கு
ஒருவர் மட்டும் ஏன்  உரிமை கொள்கிறார்?
எந்த வகையில் இது நியாயம் ஆகும்?

பாதுகாத்து சுமப்பதில்
பெரும்பங்கு வகிக்கும்
பெண்ணின் ஆற்றலுக்கு 
பெருங்குறை வைத்த 
சட்டமும் ஒரு சட்டமோ?

மாற்றங்களைச் சுமந்து மறுபடி மறுபடி
ஏற்றங் காண்பவள் பெண் என்ற பெருமகள்.-அவள் ஆற்றலைப் புதைத்து
அநீதி செய்வதை எந்த ஏட்டிலே
எழுதித் தீர்ப்பது?
நீதி என்றாலே கண்கட்டி வித்தையா?
நீதி தேவதையும் கண்கட்டியது இதனாலா?!!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹