வானம் மனம் காதல்
வானம் உன்னைப் போல்
அதிசயமானது...
அந்தி.... அதிகாலை....
நிமிடத்துக்கு நிமிடம்....
வான வதனத்தில்
நாணமும் நயனங்களும்....
மழையை ஏந்தி ஒரு பிரதிபலிப்பு....
குளிரைத் தூவி ஒரு அணைப்பு....
வெயிலைக் கொட்டி ஒரு வெறுப்பு...
முகிலைப் போர்த்தொரு அலங்காரம்.
சிலவேளை முற்றும்
துறந்த நிர்வாணியாய்.....
வான வர்ணங்கள்
உன் மனதை நிகர்த்தவை.
வானம் அடிக்கடி நிறம்மாறினும்
அழகு நிகர்த்த வானம் வானமே..
உன் பிரதிபலிப்புகள்
அடிக்கடி மாறினும்
உன் காதல் வானம் போன்றது.
வான வர்ணங்கள் உன்
மனதை நிகர்த்தவை.
வானத்தின் மாற்றங்களுக்காய்
வானம் இடம் பெயர்வதில்லை.
மனதின் மாற்றங்களுக்காய்
காதல் விலகப்போவதில்லை...
உன்னைப் போலவே
வானமும் அதிசயமானது.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija

Comments
Post a Comment