ஆதிமனிதர்கள் அதிஸ்ரசாலிகள்.

ஆதிமனிதர்கள் அதிஸ்ரசாலிகள்.
காய்கனி கிழங்கினை உண்டான்.
விலங்கு மாமிசம் ருசித்தான்.
காடும் களனியும் வீடானது
ஆடை பற்றிய அவஸ்தை இல்லை.
காற்றோட்ட சுகத்தோடு
ஏகாந்த இன்பம்.. ........

அடடா!!!!!
யாருக்கு முதலில்
ஆடைக் கனவு வந்ததோ?
எதற்காக வந்ததோ?
நிச்சயமாக மானம் என்பதை
என் ஆதிக்குலத்தோன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.

குளிரும் வெயிலும்
அவனைக் குத்தியபோது
வாழ்விடத்தன்மைக்காய்
தன்னை வசப்படுத்தலானான்.
கிடந்ததை அணைத்து
ஆடையாக்கினான்.
ஆடை நாகரிகம் வாழ்விடத்தை
வரிந்து கூறியது.

வளர்ச்சி வளர்ச்சி என்று
ஆதிமனிதனை புறமொதுக்கிய
நாகரீக மனிதர்களுக்கு
ஆடையால் வந்தது அவஸ்தை.
மூடு என்கிறான் ஒருவன்
மூடாதே என்கிறான் மற்றவன்.
சுற்று என்கிறான் ஒருவன்.
சுற்றாதே என்கிறான் இன்னொருவன்.

ஆடைதானாம் காம மருந்தென
ஆலட்டல்களும் அலம்பல்களும்.
மூடிக்கட்டிவிட்டால் உணர்ச்சிகள்
உறங்கிடுமா?
ஆடைக் குறைப்பால் உணர்ச்சிகள்
பூத்திடுமா?
வார்ப்பும் வளர்ப்பும்
சரியாக இருந்தால் சரியாகும் எல்லாமே.

வெற்றுமேனியோடு காற்றாடும்
ஆணைக்கண்டு
பெண் காம வெறிகொண்டு
கொத்திக் குதறுவதில்லையே...
அப்படி ஒரு நிலையை
கற்பனை செய்து பாருங்களேன்.

பகுத்தறிவு உடையில் என்றால்
அந்த உடை எதற்கு?
எல்லோரும் ஆதிமனிதருக்கு நன்றிகூறுங்கள்.
அவர்கள் தான் அதிஸ்ரசாலிகள்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா.
Latha kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹