உயிர் வாழும் காதல்...




கடல் மீது ஒரு கப்பல்.
உலகம் அளந்தாட ஒரு பயணம்.
ஏழை அவனுக்கும் யோகம் கிடைத்தது .
ஏறிக் கொண்டான் கப்பலில்.
உல்லாசப் பயணத்தில்
கப்பலெங்கும் ஓடித்திரிந்தான்.
கடலலைகளை ரசிப்பதிலும்
விண்மீன்களை எண்ணுவதிலும்
காற்றோடு பறப்பதிலும்
உவகை கொண்டான்.

கடலில் குதிக்க முயன்றவளை
கதை கொடுத்துக் காப்பாற்றினான்.
காதல் மலர்ந்தது அவன் குறும்பில்.
கப்பலே அவர்களின் விளையாட்டுத்தளம்.
அரச பெண்ணுக்கு நாடோடியில் காதல்
நான்கு நாள் காதலில் கண்டவை ஏராளம்.

குறுகிய காதலிலும் உயிரிருந்தது.
மன நெருக்கமும் துடிப்புமிருந்தது.
வயது ஒரு தடை தராத காதலாக
அவன் உள்ளம் அவளை அணைத்தது.
இருவரின் நெருக்கமும்
அரச வம்சத்திற்கு தலையிடியானது.
சதியும் கொதியும் கொதித்து
சதி விதியாடியது.

அரச சதியில்  கள்வனாக்கப்பட்ட
கோவலனின் காதலியாய் அவள்.
பாறை மோதி கப்பல் மூழ்கியது...
கப்பலின் அடித்தளத்தில் காதலன்
தேடலும் விலங்கொடிப்பும் வெற்றி
உயிரைக் காக்கும் போராட்டம்.
தத்தளிக்கும் கடலில் தத்தளித்தது காதல்..
ஒருவரை மட்டுமாம் தாங்கும் மரக்குற்றி
விதியும் சதி செய்தது.
காதலன் தியாகி ஆனான்.

அரச பெண்ணுக்கு நடக்கப்போகும்
அவலம் தெரியவில்லை.
கடல் குளிரில் தன்னை அடக்கி
மரக்கலத்தைக் கெட்டியாகப் பிடித்தபடி
கதையளந்தான் காதலன் வலிமறைத்து.
அசதியில் அரசபெண் துயிலடைந்தாள்.
விழித்த போது குளிர்க்கடலில்
உடல் விறைத்து உயிரற்றிருந்தான் காதலன்.

நெஞ்சம் பிளக்கும் வலியோடு
நெடிதுயர்ந்த வேதனையோடு
கொஞ்சி விடை கொடுத்தாள் காதலி.
கடலுக்குள் கரைந்து மறைந்தது
காதலை அள்ளித்தந்தவனின் உடல்.

அரச நிலை மறைத்து கடைசிவரை
காதலுக்காய் வாழ்ந்தாள்.
நான்கு நாள் காதலும்
புனிதம் எனில் உயிர் வாழும்.
இது #டைட்டானிக் #காதல் #கதை.

(1912.04.15 டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கியது)
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா.
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹