பாரபட்சம் 😂😂😂😰😰


சிந்துவெளியின் முந்தைக் கடவுள்களே!
எங்கள் முகாரி ராகம்
உங்கள் சிந்தையில் பதியாதோ?
பாம்பை கழுத்திலேற்றி
கூத்தாடும் கூத்தனுக்கு எங்கள்
வாழ்வோடும் கூத்திடல் முறைதானோ?

நஞ்சைத்தின்றவனினன் கண்டத்தை
அஞ்சி அணைத்தவளுக்கு எங்கள்வாழ்வில்
நஞ்சாய் உமிழ்ந்து உயிர்குடித்தவரின்
குண்டுகளை ஏந்தி காத்திடத் தெரியல.

பேரண்டத்தைப் பேழை வயிற்றில் சுமந்து
பெரும்பாடு படும் பிள்ளையாருக்கு
சின்னனும் பெரிதுமாக சிதறிப்போனவரின்
சிறிய இடத்தின் உயிர்களைக் காக்கத் தெரியல.

மயிலேறி மாம்பழத்துக்காக பறந்து
உலகைச் சுற்றியவருக்கு
மண்ணில் பசியோடு பலர் வாடும்
உண்மை நிலை தெரியுதில்லை.

நல்ல நகையணிகலன் பூண்டு
நளினம் காட்டும் பெண் கடவுளர்க்கு
கையெடுத்து கும்பிட்டு எனக்கும் தா என
மன்றாடும் ஏழைப் பெண்களின்
ஏக்கம் தெரியுதில்லை.

மயிலுக்கு பாம்புக்கு எலிக்கு நாய்க்கு
அடித்த பெரும் யோகம் ஒரு ஏழை.
மானிடப் பிறவிக்கு இல்லை
கேட்டால் மனிதன் கடவுள் படைத்த
சிறப்புப் படைப்பாம். சிரிப்பா இருக்குதடா.
பாரபட்சம் காட்டும் கடவுளர்களே..!

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹