தறுதலைக்கு.....சமர்ப்பணம்.

சீ... நாயே என
சினக்க வைக்கிறது உன் செயல்.

தவமாய்த் தவமிருந்த ஒரு
புனித தாய்க்கும் தந்தைக்கும்
தறுதலையாகப் பிறந்த
தரங்கெட்ட ஆண்மகன் நீ.

சீதனச் சந்தையில் பெண்ணை
ஏலம் விட்ட முள்ளந்தண்டிலி.

உன் அன்னையின்
அடிவயிற்றின் கீழே
ஒளிந்திருக்கும் யோனி தான்
எல்லாப் பெண்களுக்குமே உண்டு
என்பதை நீ அறியும் காலம் எப்போ?
நீ சென்ற பாதையும் செதுக்கப்பட்டு
நீ வந்த பாதையும் அது தான்
என்பதை உணரும் காலம் எப்போ?

உன் அப்பனின் அடிவயிற்றின் கீழ்
தொங்கும் கோயில் மணி உருத்தான்
உனக்கும் உண்டென்பதை
நீயும் அறிவாய்.

ஆகம விதிகளை மீறி
கண்ட இடத்திலும் மணியடிக்க முடியாது.
என்பதும் உனக்குத் தெரிந்ததே.
கோணலான உன்
புத்திக்கும் கொள்கைக்கும்
ஆகம விதிகள் எம்மாத்திரம்?????

கண்டதே காட்சி கொண்டதே கோலமென
வாழத் துடித்து உனது
பிறப்பிடத்தை தரக்குறைவாக்கிவிட்டு
நிமிர்த்திய நெஞ்சுடன்
ஆண்மை காட்டுவது
அசிங்கத்திலும் அசிங்கமே.

அக்கினி வலம் உன் வாழ்வில்
எத்தனை தடவை அரங்கேறுமோ?
உன் உன்மத்த ஊற்றுகையை
சுமக்கும் பள்ளத்தாக்காய்
சுமந்திட பெண் எனும்
நதிப்படுக்கை தேவைப்படுகிறது.
சலனமற்று நகரும் சண்டாள
ஆண் பிறவியில் உனக்கொரு
இறுமாப்பு.
சீ..... நாயே என
சினக்க வைக்கிறது உன் செயல்.

விதைக்கத் தெரிந்தவனுக்கு
தண்ணீருடன் பசளையிட்டு
காவலுடன் காத்திருந்து
அறுவடை செய்யவும்
தெரிந்திருக்க வேண்டும்.

பெண்ணின்பம் பெரிதென
ஓடித்திரியும் ஆண்மகனே!
கீழே தொங்கும் உன் குஞ்சுமணியை
மறைக்காதே.
அந்த மறைப்பு உனக்குத் தேவையற்றது.
மன்னித்து விடு
உனக்கும் நாய்க்கும்
வித்தியாசம் தெரியவில்லை.
அவையும் கண்ட இடங்களில்
கலவி செய்வதால்
ஒரே தராசில் போடலாம் பிழையில்லை.

வன்னிமகள்  எஸ். கே.சஞ்சிகா

குறிப்பு:-
    காமத்தோடு அலையும் ஆண்களுக்கும்;
சீதன வெறிபிடித்த ஆண்களுக்கும் சமர்ப்பணம் .






Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹