வெளிச்சத்தை மூடிவிட்டு வெளிச்சம் தேடும் வித்தகர்கள்.




வீட்டுக்கு வந்த தரகர் கேட்டார்
மாப்பிள்ளை அரச உத்தியோகமோ?.....

பெட்டைக்கு ஒரு அரச வேலை
கிடைக்க வேணும் .
உணவை ஒறுத்து
அம்மா கடும் விரதம் ........

சமூர்த்திச் சங்கத்தில கால் கடுக்க
செல்பட்டுக் காலிழந்த அப்பா.
அரச பணத்துக்காக...

"கண்கெட்டுப் போவார்
இன்னும் வீட்டுத்திட்டம் தரேல்லை."
அரசாங்கத்தை திட்டித் தீர்க்கிறாள்
பக்கத்து வீட்டுக்காரி......

அதிகாலையில் தம்பியும் தங்கையும்
ஓடுகிறார்கள் தூக்க முடியாத
அரசின் இலவசப் புத்தகங்களுடன்....

எடுத்தது பாதி எடுக்காதது பாதியாய்
ஓடுறா அத்தை அவா
அரசாங்கப்பள்ளிக்கூட ஆசிரியர்......

கோழி மேய்த்தாலும் கவர்மன்ற்
கோழி மேய்க்கோணுமென்று
வேலையில்லா பட்டதாரிகள் வேலைதேடி...

கிராம அலுவலர் வரட்டுமாம்
ஏதோ குடுக்கப் போறாராம்
நீண்ட வரிசையில் எதிர்பார்ப்போடு மக்கள்....

அரச வேலை வேணும்
அரச சம்பளம் வேணும்.
அரச படிப்பு வேணும்.
அரச சாமான் வேணும்.
அரச சசலுகையும் வேணும்
இதுக்கெல்லாம் வராத வெட்கம்.
இதுக்கெல்லாம் பற்றி எரியாத
புத்தி வெளிச்சம்
வெசாக்கூடு வெளிச்சம் பட்டதால்
கூசுதாம் குறுகுதாம்.
வேடிக்கையா இருக்குதடா.....

முள்ளுக்கம்பிக்குள் பூட்டி வைத்து
எறிந்த உணவை ஏந்தி உண்டோருக்கு
சிங்களவன் பந்தியிட்டு பரிமாறும்
உணவு கேவலமா இருக்கிறதாம்.

புலம்பெயரிகள் வந்து
கோவில் கட்டும் காசுக்கு
தொழில் கூடங்கள் நிறுவி
தொழில் வாய்ப்புகள் வழங்க மனமில்லை.
ஆடம்பரத்தையும்  அலட்சியப் பண விசுறலையும்
ஏழைகள் கண்முன் காட்டி
வழிதவறச் செய்யும்
கொடுஞ் செயலைச் செய்கின்றார்.

அநாதைகள் முதியோர்கள் அங்கவீனராய்
நொந்து கெட்டோருக்கு
ஒருபிடி உணவிட்டு
பறைதட்டிப்படம் பிடித்து வெள்ளைக்காரனிடம் காட்டி
பணமீட்டும் புலம்பெயர் வள்ளல்கள்
கொடி பிடித்து ஆட்டி ஆட்டி
நாடு பிடித்து பயன் என்ன?

பொருந்தாத பொருத்தங்களை அணிந்து
புலம்புகிறார் வாய்ச்சொல் வீரர்கள்.
வெளிச்சத்தை மூடிவிட்டு
அயலான் வெளிச்சத்தில் கூச்சமாம்.
வெற்று வார்த்தையில் கோபுரம் கட்டும்
வேடிக்கை மனிதர்களே!
வெளிச்சம் வெசாக்கூட்டில் அல்ல..
அடிப்படையே நாறிக்கிடக்குது.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹