புல்லரிக்கும் புதுச்சுகம்



என் அருமைத் தம்பியே
நீ யாருக்கடா சாமரம் வீசுகிறாய்?
பன்றியோடு சேர்ந்த பசுக்கன்று ஆனாயேடா...?

நீ யார்? உன் வம்சம் என்ன?
அறிந்து நிமிர்ந்திடடா.
அரச பரம்பரையின் மிடுக்கோடு
பெண்களும் பெருவீரம் கண்ட மண் உனது.
முதியோரும் முள்ளந்தண்டை நிமிர்த்தி
அணிநடை பயின்ற மண் உனது.

செருக்களத்தில் உன் தலைவன்
செருமினாலே எதிரிகள்
காலோடு சலமோடும் .
சதிவகுத்த சகுனியர்கள்
வென்ற கதை நீயும் அறிவாய்.
வீழ்ந்தது ஒரு காலப் பதிவெனில்
எழுவதும் ஒரு சூரிய உதயமடா.

செங்குறுதி பாய்ந்த மண்ணை
செந்தமிழால் பூத்த மண்ணை
பங்கமுறு செய்கைகளை அறுத்தமண்ணை
பிழைப்புக்காய் கரம் நீட்டி
உழைக்கின்ற சொறி நாய்க்கு
சாமரம் வீசுகிறாய் விழித்திடடா.

நீ எங்கள் தேசப் புதல்வனடா..
தமிழீழத்தின் முத்தடா.
கூத்தாடிகளுக்கும் உனக்கும்
சம்மந்தமேன்?  விலகிடடா.
உன் தேசக்காற்றை வாழவைக்க
உன் கரங்களால் பசுமை சேர்.
மாற்றான் வீட்டு மாங்காய் இனிக்காது.
வியர்வை சிந்தி நீ நட்ட மாமரம்
பூத்துக்கனியப் பிடிங்கி உண்பது
புல்லரிக்கும் புதுச்சுகம் உணர்ந்திடடா.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹