மந்தி கலை(லாய்)ப்பு...



சு....சு.... மந்தியை கலையுங்கோ .....
கொப்புக்களை
கிளைகளை
முறிக்குது.

பழங்கள் காய்ந்த பிஞ்சுகளை
வீணாக்கி காலடியில் நசுக்குதே...!

அலம்புது புலம்புது
அங்குமிங்கும் தாவுது.

அடாத்தாய் ஓடி ஓடித்துள்ளுது.
அடிக்கடி அலம்புது.
சொறியுது பிராண்டுது
சன்னை காட்டிக் கத்துது.

சு... சு.... மந்தியை கலையுங்கோ...
மரங்கள் உரு மாறுது
வளங்கள் கெட்டுப் போகுது- எங்கள்
மாண்பும் கெட்டுப் போகுது.
சு.... சு..... மந்தியை கலையுங்கோ.

வெண்கலக் கடைக்குள் யானையாய்-இந்த
கண்கடை அற்றது ஆடுது.

கசிப்புக் குடிச்ச மந்தியோ?
இல்லை கலப்பில் வந்த சனியனோ?

ஐயோ! தோட்டந்துரவை நாசமாய்
இந்த கொழுத்த மந்தி பிராண்டுதே.!

முன்னோர் வியர்வை சிந்தி நட்டதை
சின்னோர் விலங்கு வந்து கிளறுதே.!

ஐயோ! விழித்த விழியராய் வாருங்கள்
மந்தியை மரத்தை விட்டுக் கலைத்திட.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
04:42PM

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹