உணர்வாய்....உணர்வாய்...... 🌙🌙🌙🌙🌙🌙🌙🌙
நிலவோடு நீ பேசும்
ஓர் நாளில் நானங்கு
இருப்பதாய் நீயுணர்வாய்....
அன்றுன் மனம் பேசும்
மடை திறந்த வெள்ளமென
கரைந்தோடும் நீர்த்துளிகள்
கண்மீது வெப்பூட்டும்
நெஞ்சமும் பதைபதைக்கும்.
போர் தின்ற காயங்களை
பொறுத்துலகில் வாழ்ந்ததையும்
பெருமையாய் நீ நினைப்பாய்.
கடந்த பெரும் காலத்தை
தனிமரமாய் தாங்கியதை
நினைந்து நினைந்து நெக்குருவாய்..
வாழ முடியாத வாழ்வொன்றை
இலாவகமாய் கடந்ததையும்
உவகையுடன் மனங்கொள்ளுவாய்...
சிரித்தபடி இறந்திருந்த என்முகமும்
உன் நினைவில்
அடிக்கடி வந்து மறையும்.
நிரந்தரமில்லாத வாழ்வினை
கடந்தோடும் கடிகாரம்
கடிந்திடாமல் கூறி நகரும்.-இனி
யாரையுமே வெறுத்திடாமல்
நடைபோட வேணுமென
என் வாழ்வு உனக்குரைக்கும்.
நிலவோடு நீ பேசும்
ஓர் நாளில் நானங்கு
இருப்பதாய் நீயுணர்வாய்....
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment