விடுதலையிரவுகள்....... 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃🌃
கடந்து போன இரவுகளைச்
சபிக்கிறேன்.
தொலைந்து போகட்டும் அந்த
சுமை ஏறிய இரவுகள்.
சுவருக்குள் நசுங்கிய
இரவுகளின் கண்ணீருக்கு விடுதலை.
ஆகா....!!!
இரவின் வெட்டை வெளியில்
பட்டுத் தழுவும் காற்றை
இப்போதெல்லாம் மனம் ரசிக்கிறதே....!
இருளோடு இருளாக பறக்கும்
பட்சிகளுக்குத் தான்
எத்தனை கனவுகள்....
அசைந்தாடும் தலைபெருத்த மரங்கள்...
நாசியை நனைக்கும்
இரவுப்பூக்களின் வாசனை.......எல்லாமே தனிமையிலும் அழகாயுள்ளது.
அடைக்கப்பட்ட சுவருக்குள்
கிடைத்த மகிழ்ச்சி என்ற அவலத்தைவிட.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment