நதி நிலை நியதி. வாழ்விற்கு பெறுதி. 💦💦💦💦💦💦
உச்சி விழுந்த நதிகள்
உருண்டோடலே இயல்பு.
கீழே...கீழே...கீழே....என்று
பணிந்தோடலே நியதி.
நதிகள் ஓடும் இடங்களெங்கும்
விதந்தாடிடும் பசுமை.
கரையைத் தழுவி
நுரையைச் சிதறி
மகிழ்ந்தாடுமே விரைவில்.
பள்ளம் தேடிப் பாய்ந்தோடிடும்
உள்ளம் கொண்டது நதிநீர்.
ஓடும் நதிகள் கூவமானால்
நாறிப்போகுமே நிலநீர்.
குடத்தில் குளத்தில் ஏந்திய பின்னும்
குடைந்தோடுமே கடலை.
நதிகள் மலை மீள் ஏறுவதில்லை.
தேடினும் அது கை கூடுவதில்லை.
நதிக்கு மலை நிரந்தர வாழ்விடமல்ல.
போகும் இடமெலாம் பொழிவை வழங்கி
புன்னகைப்பதே நதியதன் இயல்பு.
நதியாய் ஓடு .....
நதியாய் வாழ்வளி.....
நிரந்தரமில்லா வாழ்வை உணர
நிமிர்ந்து நோக்கு நதி நல்லுதாரணம்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment