புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹
புதுப் பாதை தந்தாய்.
காலப் பெருவெளியில்
நகைக்காத இடமும் தந்தாய்.
இருவிழியூடு அகவிழியை
அகலத் திறக்க பாசக்கயிறானாய்.
வீசி ஒருவகை நேச விதையை
நெஞ்சத்தில் விதைத்தாய்.
தமிழையும் தமிழ்ப் பெருமையையும்
இகழாத ஏற்றம் தந்தாய்..
உயிரகத்தால் பிரியும் போதும்
உன் பெயரை உச்சரிக்கும்
உயர் நிலையைத் தந்தாய்.
கண்டிப்பிலும் பாசம்
கைகோர்க்கும் என்பதை
நினைந்து நினைந்து
உருக வைத்தாய்....
அன்பிலே நீ ஒரு புது ரகமென
அறிய வைத்தாய்.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments
Post a Comment