மௌனம் அழகு மொழி

மௌனம் காதலில்
அழகான பரிபாஷை.
மனதோடு பேசி கீச்சுகிச்சு மூட்டும்
மந்திர உச்சாடணம்.
காதல் பறவைகளின்
கன்னியமான கோப ஒத்திகை.
உருவின்றித் தழுவும்
மெய் அன்பின் முன்னோடிப் பரீட்சை.
தவறுகளைப் புடம்போட்டு
ஒளிர வைக்கும் பொற்சூளை.
இயற்கை அழகில் மனங் கவர்ந்தாரை
கலந்தள்ளும் அழகியல் உணர்வு.
நெருங்கி நெருங்கி நெருப்பிட்டு
குளிர்த்தி செய்யும் இயற்கை வினோதம்.
மௌன மொழியின் சுதந்திரச் சிறகுகள்
யாருக்கும் தெரியாமல் விரிந்து குறுகி
மலை(ழை)ச்சாரலில் நீராடும் அகமொழி.
தித்திக்கும் மெய்யோடு உரசி உணர்வில்
பசித் தீ மூட்டும் சிக்கிமுக்கி கல் மௌனம் அழகிய காதற்பரிசு.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹