ஒப்பந்த தீப்பந்தம்


பதிவுத்திருமணம் போல
காதலும் ஒரு ஒப்பந்த
தீப்பந்தம்.
ஏற்றும் விண்ணப்பத்தோடு மலர்ந்து
விண்ணப்பத்தோடு வலுவிழந்தும்
போகும் .

நெருங்கிக் கலந்த நெஞ்சங்கள்
நொருங்கியும் போகலாம்.
ஆளாளுக்கு அதன்
அளவு விகிதம் வேறுபடலாம்.

சில ஒப்பந்தங்கள்
கடனுக்கும் பழிப்புக்கும் அஞ்சித்
தொடரலாம். அதில்
சுவை குறைந்திருக்கவே
வாய்ப்பு அதிகம்.

ஒப்பந்தத்தை உணர்ந்து
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு
ஒப்பந்தத் தீபத்தை ஏற்றிக்
காதலியுங்கள்.

காதல் ஒப்பந்தம் இனிக்கும்.
தீபமென ஒளிரும். உள்ளத்தில்
வசதி இருக்கும் வரை
காதலியுங்கள் யாரும்
தடுக்கப்போவதில்லை.

இனிப்பது மட்டுமல்ல காதல்.
அது அறுசுவை அமுதம்.
புரிந்து கொள்ளுங்கள்.

விடைபெறும் காலம் வரும் போதும்
அதே காதலோடு வழியனுப்பவும்
கற்றுக்கொண்டு காதலியுங்கள்.
அது தான் அழகும் தரும்.

Latha kanthaiya
(வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)






Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹