விதிகள் வலிமை மிக்கவை

துவைத்துப் போட்ட
வெள்ளை ஆடையில்
தெறித்து விழுந்த வானவில்
நிறங்களைப் பிரித்துத் தேடிய
நியூட்டனின் மூன்றாம் விதிக்குள்
குதித்து குளிக்கும்
உள்ளத்தின் வண்ணங்களை
உய்த்தறிய முடியாத
காதல் ஞானியர்கள்,
காதலர் தினத்தில் அணியும்
ஆடையின் வண்ணத்தை
அலசி ஆராய்ந்து தேடினர்.
விதிகள் வலிமை மிக்கவை
நிறங்களை விட.

Latha kanthaiya
( வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)

Comments

Popular posts from this blog

சித்து விளையாட்டு.

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

இதய முற்றத்தில்..... ❤💚❤💚❤💚❤💚❤ 🐤🐦🐤🐦🐤🐦🐤🐦🐤🐦