(11)
கடைகளில் தொங்கியது
/ விலைக் குறிப்பு பட்டியல்/
கடவுளர் சிலைகளுக்கும்.

(12)
 மழை பொழிந்தது
/ குடை பிடித்தன காளான்கள்/
ஏழைகளுக்கு விருந்து

(13)
மயில்களின் இறகினில்
/  கண்களின் அபிநயம் /
காட்டினாள் சிறுமி

(14)
புகையிரதத் தண்டவாளம்
/இணைந்திடத் துடித்தது/
காதலில் மனது.

(15)
பழய புத்தகம்
/ செல்லரித்துக் கிடந்தது/
செருக்கள பூமி.

(16)
மின்மினிப்பூச்சிகள்
/மினு மினுத்து ஒளிர்ந்தன/
தெரு விளக்கு கம்பங்களில்

Comments

Popular posts from this blog

அஞ்ஞாதவாசம் புதிர்க்கதை

புது ரகம் நீ............ 🌹🌹🌹🌹🌹🌹🌹