சிரிப்புத் தான் வந்ததடி... தோழி சிரிப்புத் தான் வந்ததடி. 😜😜😜😜😜😜😜😜😜😜 கல்யாண வயது வந்ததென சொல்லி மாப்பிள்ளை பார்த்தாரடி தோழி மாப்பிள்ளை பார்த்தாரடி. நாட்டு மாப்பிள்ளை நல்லதில்லை என வெளிநாடு அனுப்பினால் வீடும் விளங்குமென தீர்மானங் கொண்டாரடி. ஓடித்திரிந்ததில் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஆப்பிட்டுக் கொண்டானடி. தரகரிடம் அந்த மாப்பிள்ளை வைத்த வேண்டுதல்கள் இவைதானடி... நீண்ட முடியுடைய பெண் வேணும். மெல்லிய பெண்ணாக இருக்கோணும். சின்னப் பெண்ணாக இருக்கோணும். நான் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்ததால் பெருமை அடைந்தேனடி தோழி பெருமை அடைந்தேனடி.... சம்மந்தம் பேசிய தரகன் தந்த புகைப்படம் எனக்கும் பிடித்ததடி..... கமல் போல் அழகிய விழியுடன்... ஓர் அழகுத் திருமுகம் .... வகிர்ந்தெடுத்த தலைமுடி.... பார்க்கப் பார்க்கத் தேனூறும் பார்வையடி.... ஆவல் தான் மனமெங்கிலும்... நான் தேடித் திரவியம் தேடினும் இவன் போல் ஒரு மாப்பிள்ளை அமையாதடி.....என் கற்பனைச் சிறகுகள் காற்றில் பறந்திட கை கோர்த்து அவன் என் கையைப் பிடித்திட வெட்கமும் நாணமும் கொல்லவும் அள்ளவும் கனாக் கண்டேனடி ஆண்டாள் போல்...
Comments
Post a Comment