மழலையாகி......

நியாயங்கள் பூக்கும் தடாகத்தில் நல்ல விளைவுகளை விருந்தாக்கும் தடாகத்தில் கரையோரம் அமர்ந்து காற்றுவாங்கி மூச்சை முற்றிலும் புதிதாக்க ஆசை ஆசை. சேற்றில் முகிழ்ந்தாடும் செந்தாமரை அல்லி புல்லி பூத்து குலுங்குவதும் புத்தெளிலுடன் மனத்தேரிலே ஊர்வலம் ஏறுவதும் இயற்கையின் பேரமுதென உணர்ந்து நெஞ்சம் பூரித்து புன்னகைக்க அடிமனதில் ஆசை. வண்ணக்கலவையிட்டு வடிவூட்டும் கலையேற்றி புளுக்களை புதுமையாக்கி ரசிக்க வைக்கும் இயற்கைக்கு இதயம் பேரழகு. அந்தப் பேரழகில் இதயத்தை பொருத்தி பேரழகாக்கி நல்ல புதுப்பிறவி கொண்டாட ஆசை. பூவரசும் பப்பா தண்டும் கொண்டு புதுவிதமாய் நாதசுரம் மீட்டி புதுக்காற்றை புது உலகை சின்னத்தளிர்களிற்கு பரிசளிக்க ஆசை. நாணலோடும் கோரை காரை சூரையோடும் உறவாடி பூமித்தாயை மீண்டும் நல்ல அழகியாக்கி ஆராதிக்க ஆசை. தும்பியோடும் தம்பளாம் பூச்சயோடும் இன்பக்கதை பேசி இன்னும் நல்ல பொன்வண்டையும் பொலிந்த நல்ல தேனருந்தும் சின்னக்குருவிகளையும் அரவணைத்து வீட்டுமுற்றம் நிறைந்த வண்ணக்கலவை தெளித்த கோலமாய் அழகூட்டும் பூக்களையும் தென்னங்குரும்பைகளையும் கொண்டு நல்லதொரு தேரும் கட்டி இன...