வெள்ளைத் துகிலுடுத்த
விழிகளுக்குக் கூட
அழகிய கறுத்தமணிப் பொட்டு.
விழிகளும் உற்றுநோக்கா
வெற்றிடம்.....
விதவைகளின் நெற்றி.
வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Comments
Popular posts from this blog
-
சிரிப்புத் தான் வந்ததடி... தோழி சிரிப்புத் தான் வந்ததடி. 😜😜😜😜😜😜😜😜😜😜 கல்யாண வயது வந்ததென சொல்லி மாப்பிள்ளை பார்த்தாரடி தோழி மாப்பிள்ளை பார்த்தாரடி. நாட்டு மாப்பிள்ளை நல்லதில்லை என வெளிநாடு அனுப்பினால் வீடும் விளங்குமென தீர்மானங் கொண்டாரடி. ஓடித்திரிந்ததில் ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை ஆப்பிட்டுக் கொண்டானடி. தரகரிடம் அந்த மாப்பிள்ளை வைத்த வேண்டுதல்கள் இவைதானடி... நீண்ட முடியுடைய பெண் வேணும். மெல்லிய பெண்ணாக இருக்கோணும். சின்னப் பெண்ணாக இருக்கோணும். நான் அத்தனை அம்சமும் பொருந்தி இருந்ததால் பெருமை அடைந்தேனடி தோழி பெருமை அடைந்தேனடி.... சம்மந்தம் பேசிய தரகன் தந்த புகைப்படம் எனக்கும் பிடித்ததடி..... கமல் போல் அழகிய விழியுடன்... ஓர் அழகுத் திருமுகம் .... வகிர்ந்தெடுத்த தலைமுடி.... பார்க்கப் பார்க்கத் தேனூறும் பார்வையடி.... ஆவல் தான் மனமெங்கிலும்... நான் தேடித் திரவியம் தேடினும் இவன் போல் ஒரு மாப்பிள்ளை அமையாதடி.....என் கற்பனைச் சிறகுகள் காற்றில் பறந்திட கை கோர்த்து அவன் என் கையைப் பிடித்திட வெட்கமும் நாணமும் கொல்லவும் அள்ளவும் கனாக் கண்டேனடி ஆண்டாள் போல்...
அரசியல் சூதாட்ட அகங்களின் கபடத்தில் அகப்பட்டுச் சிதறியது அடைகாத்த இலட்சியம். சுய நலப் பிரிவுகளால் சொந்தங்கள் நடுத்தெருவில். உயிர்களின் இழப்புடன் தேசத்தின் துகில் உரிப்பு..... இரகசிய அமைதியில் தலைவனைத் தேடி காலக் காத்திருப்பு நீட்சியாய்.... வரமாட்டான் இனித் தலைவன் என்று இறப்பு சான்றிதழ் இல்லாமலே தலைவனுக்குப் போட்டியிட்டன பன்றிக் கூட்டங்கள். பஞ்சமா பாதகங்கள் பரந்தன தேசத்தில்... தலைவிரி கோலத்துடன் தரங்கெட்ட அரசியல்... ஆசன ஆர்வலரின் ஆசனங்களுக்கு தீ மூட்ட அனுமானின் வால் நீள்கிறது .... பஞ்ச பாண்டவர்கள் தோன்றித் தொடுத்த போரில் மீண்டு கொண்டனர் தேசத்தை மீண்டும். அஞ்ஞாதவாசம் பன்னிரண்டு ஆண்டுகளை புதைத்துக் கிளர்வது. புரியாதவர்க்கு இது புதிர்க்கதை தான். வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha Kanthaija
தொலை தூரமிருந்தாலும் தெவிட்டாத தேனமுத குரலாலே மகிழ்வு தந்தாய்... நெருங்கி வந்த போதினிலே நெருப்பாக சுட்டெரித்தாய். முகம் பார்க்க முடியாத தொடுவானம் நீ ஆனாய்... நேரில் காணாத போதிலும் -பாரில் பெருபகை நானானேன். இன்னும் குறையாத காதலுடன் முதன்முதல் முகமூடி நானணிந்தேன். குமுறிக் கொதிக்கும் என் உள்ள எரிமலைக்குழம்பு விழிச் சிகரத்தால் விடுவிடென கன்னத்துப் பள்ளத்தாக்கால் பாய்ந்து ஆவியாகும் கோலமதை நீ காணக் கூடாதே.... முதன் முதலாய் நான் முகமூடி அணிந்து கொண்டேன். என்னை கரைக்கும் உன்மீதான காதல் உன்தன் வெறுப்பில் எரிந்தும் ஒளிர்கிறதே. யாருக்கும் தெரியாது மனதை மறைக்க முகமூடி அணிந்தேன். -அந்த மூகமூடி சிரிக்குது...உள்ளிருக்கும் மனம் மூடி அழுகுது. வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா Latha Kanthaija
Comments
Post a Comment