புலர்வின் புதுமை


நீ வந்தால் தான் உள்ளத்தில் 
அதிகாலை விடியல்.
உன்னைத் தொழுதால் தான்
ஒளிசூடும் விழிகள்.

தூரத்தில் நின்று பூமியின்
காதல் நரம்புகளை 
மீட்டும் சூரியோதயம் நீ.

கிட்ட நெருங்கினால்
மத்திய கோட்டை 
சுட்டெரிக்கும் சூரியனாய்
உன் செயல்கள்.

மாலையில் சமரசக்
காதல் மொழிந்து அலங்கரிக்கும்
அந்திச் செவ்வானமாய் 
நாணம் பூசிய  வசீகரிப்பு.

கொஞ்சம் கூட வெட்கமில்லாமல்
நீருக்குள் முக்குளித்து 
புவிக்குள் புதையும் சூரிய மயக்கமாய்
மனத்தணல்களை மூடி மூழ்கிறாய்.💙

மீண்டும் ரசணை...
அதிகாரம் ......
திமிர்வாதம்.......
வாய்வாதம்........
சமரசத்தோடு உன்...சுற்றுகை.  
புலர்வின் புதுமை அதிபதி நீதான்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha Kanthaija

Comments