மனதின் தேடல்....

மழைக் குணமா இருக்குது. குடையைத் தேடுது மனது.. குளிர் தாங்க முடியவில்லை கம்பளிப் போர்வையை தேடுது மனது... கட்டிலின் கால்கள் இறுக்கம் குறைந்து கண்டபடி சரிஞ்சாடுது. ஆணியையும் சுத்தியலையும் பரபரத்து தேடுது மனது... சிறுகுடலைத் தின்று விடுவது போல் பெருங்குடலின் புறுபுறுப்பு உணவைத் தேடுது மனது..... முகத்தின் அழகை சரிபார்க்க நிலைக்கண்ணாடியைத் தேடுது மனது.... நல்லதை வாசிக்க நல்ல புத்தகத்தை தேடித் துலாவுது மனது.... கேட்கவும் உணர்த்தவும் உணரவும் மொழியைத் தேடுது மனது.... தேடல் தொடர்கிறது நதியைப் போல காற்றைப்போல ஓடிக்குதித்து ஆடி அசைந்து... வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா Latha kanthaija