மதங்களுக்குத் தெரியாதது...

உள்ளாடைகளை அவிழ்த்தால் என்ன தெரியும்? என என் மகனிடம் கேட்டேன். இது என்ன கேள்வியம்மா? என நெளிந்தவனிடம் மீண்டும் கேட்டேன். குறி தான் தெரியும் என்றான். மகளிடமும் இதே கேள்வியை கேட்டேன். அசிங்கக் கேள்வி என்றவள், மீண்டும் கேட்கவே அந்தரங்கம் தான் தெரியும் என்றாள். இங்கே பாருங்கள் என அந்தரங்கத்தை அலசும் கலகக்காரர் செயலைப் படித்து காட்டினேன். முகத்தை சுழித்தபடி சொன்னார்கள் இரண்டு கால்களோடு இரண்டு கைகளோடு மனித அங்கங்களைக் கொண்ட வினோதமான கொடிய மிருகங்கள் என. கொடிய மிருகங்கள் தான் கண்களைத் தின்னும். கொடிய மிருகங்கள் தான் உயிரைப் பறிக்கும். கொடிய மிருகச் செயலே தீமூட்டல், கல் எறிதல் என குழந்தைகளுக்கு தெரிந்திருக்கிறது. அன்பைப் போதித்த மதங்களுக்குத் தெரியவில்லையே. Latha kanthaiya (வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா)