Posts

Showing posts from January, 2019
மூட(ரின்) நம்பிக்கை. குழந்தையின் கழுத்துப்பகுதியில் காணப்பட்ட நீர்த்தழும்பை கண்டு பதறிப்போனாள் துர்க்கா. " அக்கி" என்று புகுந்த வீட்டில் இருந்த வயோதிபர்களும் அயல்வீட்டு வயோதிபங்களும் கூடிக்கதைத்து  "ஏதோ அம்மன் கோபம் கொண்டிட்டா"  எனப்பேசிக்கொண்டனர்.              குழந்தைக்கு உடம்பும் கொதிக்கத்தொடங்கியிருந்தது நிலமை எப்பிடி இருக்கும் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் வலியும் வேதனையோடும் தாயை விட்டு இறங்காமல் குழந்தை ஒட்டிக்கொண்டதால் வீட்டு வேலைகளை செய்வதற்கு துர்க்காவால் முடியவில்லை. "அழுதாலும் அவளே தான் பிள்ளை பெறவேணும் " என்பதற்கிணங்க பரபரப்பாக வீட்டு வேலைகளை  ஓரளவு முடித்துக்கொண்டு  யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஒரு பேருந்தைப்பிடித்து எட்டு மணிக்கிடைல போவதே அவளுடைய எண்ணமாக இருந்தது. மணியோ விரைந்தோடி ஏழரை காட்டியது. புறப்பட்டு விட்டாள். வீட்டைப்பூட்டி வெளியேறியவளிடம் " பரியாரியாரிட வீடு தெரியுமோ? " என புகுந்தவீட்டு வயோதிபமாது வினவினாள். " எதுக்கு பரியாரிட வீடு? நான் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு போறேன்"  எனக்கூறி புறப்பட வெளி...