யாழ் மீட்டும் தெய்வமே. உனக்காக போராடி போராடி தோற்றுப்போன உணர்வுடன். மௌனித்துப் போன மலர்ச்சி இழந்த விழியும் மொழியுமாய் என் பயணம். போலிகளின் வார்த்தைகளை வஞ்ச வலைகளையும் பெரிதென கருதும் உன்னிடம் -எனது வேண்டுதல்கள் செவியேறி நியாயங்கள் வெல்லப் போவதில்லை. என் ஸ்வரங்களை உன் யாழில் மீட்டவும் போவதில்லை. பள்ளிப்பருவத்து உன் துள்ளல் நடையில் மயங்கி ஜீவநதியில் மினுங்கிய உன் விழி தரிசனத்தில் நான் மீள உயிர்த்தது தவறானது.- இப்போ மனமோ பாரப் படையானது கிரந்தம் சூடிய உன் மொழிக்குள் கிரங்கியதும் மகிழ்ந்ததும் பசுமை.-நான் கடந்தோடிய முட் தடங்களை நீ உணரப் போவதில்லை. சிலுவை சுமந்த நீள் பாதைகளை உன் புலனாய்வு மூளை உணரப் போவதில்லை. வாழ்வதற்காய் போராடிய என் பறப்பின் சிறகுளைவு உன்னால் புரிந்து கொள்வது கடினமே. வல்லரச சதிகளை வென்றாடி வாழத்துடித்த வரலாற்றில் நீண்ட கால ஓட்டத்தை உன்னால் புரிதல் கடினமானது. நீ தரித்த நிறக் கண்ணாடியை கழற்றி நிஜத்தை பார்க்கப் போவதில்லை. மரணத்தை விட கொடிய மௌனத்தை பரிசளித்தாய். உனக்காகப் போராடித் தோற்று உறங்குவேன் ஒரு மீளா உறக்கம். அப்போதா...